ஐக்கியத்தின் ஒருமைப்பாடு ONENESS OF THE UNITY 58-01-28 1.உம்முடைய பிரசன்னத்தில், உம்மை சந்திக்கும் படியாகவும், ஓ, கர்த்தாவே, எழுதப்பட்ட உம்முடைய வார்த்தையை சுற்றிலும் ஐக்கியம் கொள்ளும்படியாக இருக்கச் செய்யும். ஏற்கனவே செய்து முடிக்கப்பட்ட அல்லது சொல்லப்பட்ட ஒவ்வொன்றையும் தேவனுக்கு மகிமையாக பரிசுத்த ஆவியானவர் தாமே உயிர்ப்பித்து தரட்டும். இயேசுவின் நாமத்தில் நாங்கள் இதை கேட்கிறோம். ஆமென். நீங்கள் உட்காரலாம். 2. நான் ஏறக்குறைய பாதுகாப்பிற்காக இருந்த நிலையில் அவர்கள் என்னை பிடித்துக் கொண்டார்கள். ஆர்கன்ஸாஸிலிருக்கும் அந்த பெரிய நாட்டிலிருந்து வந்த ஒரு சிறிய ஆர்கன்ஸாஸ் சகோதரனை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னவாயிருந்தாலும் இந்த குளிர்ந்த தேசத்தில் நீ என்ன செய்துக் கொண்டிருக்கிறாய், நல்லது, நான் எங்கு சென்றாலும் ஆர்கன்ஸாஸிலிருக்கும் ஜனங்களை நான் எல்லா இடங்களிலும் பார்க்கிறேன். பரி.லூயிவில்லிலிருந்து நான் வந்ததிலிருந்து நான் சென்ற முதலாவது இடமாக அது இருந்தது. கெய்ல் அரங்கத்திலிருந்து ஆர்கன்ஸாஸுக்குள் வந்து, அந்த ஜனங்கள் எவ்விதமாக வந்தார்கள் என்பதை என்னால் மறக்க முடியவில்லை. ஓ, அவ்விதமாக.... அங்கே 28.000 ஜனங்கள் இருந்தார்களென்று ஜோஸன் பரோவில் ஒரு பத்திரிக்கை சொல்லுகிறது. அந்த பட்டணத்தில் ஜனத்தொகை 8000 அல்லது 10,000 என்று யூகிக்கிறேன். 3. பட்டணத்தின் 40 மைல் சுற்று வட்டாரத்தில் அங்கு தங்குவதற்கு இடமேயில்லை. எல்லா விவசாயம் செய்பவர்களின் வீடுகளும் தங்குவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. கூடாரங்கள் போடப்பட்டு இன்னும் மற்ற காரியங்கள் செய்யப்பட்டு ஜனங்கள் அங்கு வசிக்கின்றனர். பழைய ட்ரக் வாகனங்களில் வசித்துக் கொண்டு இருக்கிறார்கள். இன்னுமாய் ஜனங்கள்.... மழை பெய்து கொண்டு இருக்கிறது, தொடர்ந்து பெய்யும் மழையினால் ஜனங்கள் துணிகளின் பகுதிகளையும், செய்தித்தாள்களையும் வியாதியாய் இருக்கும் மக்கள் மீது மழைக்காக பிடித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்காக ஜெபிக்கும்படியாக காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த வாரத்திலோ அடுத்த வாரத்திலோ இவ்விதம் வந்திருந்தாலும் அது எந்த வித வித்தியாசத்தையும் கொண்டு வரப்போவதில்லை. அது எப்பொழுதாக இருந்தாலும் அது சரியாகவே இருந்திருக்கும். பாருங்கள்-? 4. அது கார்னிங் என்று நான் நினைக்கிறேன்... கார்னிங், நீங்கள் அதற்கு அருகாமையில் வசிக்கிறீர்கள், அப்படிதானே-? நான்.... நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்.... நான் அங்கு சில காரிங்களை பார்த்து இருக்கிறேன். நான் நினைக்கிறேன் அது டுவைட் மூடி அல்லது சாங்கி அல்லது அவர்களில் யாரோ ஒருவர், அவர்களுடைய நாட்களில் பார்த்திருக்கிறேன். நான் வனாந்திர பகுதியில் இருந்தேன், அங்கிருந்து நான் இழுக்கப்பட்டு இங்கு வந்து ஆராதனைக்கு முன்பாக ஜெபித்துக் கொண்டிருந்தேன். அந்த தூசிகள் நிறைந்த சாலையில் ஜனங்கள் கடந்து வருவதை நான் பார்த்திருக்கிறேன். மத்தியான வேளையின் நீண்டஆராதனைக்காக அவர்கள் சென்றுக் கொண்டிருந்தார்கள். 16, 18 வயதிற்கு அதிகம் இல்லாத வாலிப பெண்கள், அழகான வாலிப பெண்கள் தங்களுடைய காலுறைகளையும், காலணிகளையும் தங்களின் அக்குளின் கீழ் வைத்தவர்களாய் சென்றுக் கொண்டு இருந்தார்கள். அந்த இடத்தை அடைவதற்கு முன்பாக தங்களுடைய பாதங்களிலிருக்கும் தூசிகளை தட்டி, தங்களுடைய காலணிகளை அணிந்துக் கொண்டார்கள். அவர்களுக்கு ஒரு ஜோடு காலணி மாத்திரமே இருந்தது. அதையே அநேக நாட்களுக்கு அவர்கள் அணிந்துக் கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் உண்மையாகவே தேவனை நேசித்தார்கள். 5. அமெரிக்காவில் மிகவும் குறிப்பிடத்தக்க அற்புதங்களை நான் பார்த்திருப்பேனானால் அது அங்கு தான். வார்த்தையை சூழ்ந்திருக்கக் கூடிய பழைய பாணியிலான ஐக்கியத்திற்காகவும், தேவனுடைய ஜனங்களோடு இருக்கும்படியாகவும் இந்த நாட்கள் ஓன்றில் ஆர்கன்ஸாஸுக்கு நான் வரப்போகிறேன். 6. இப்பொழுது இந்த இரவிலே சற்று முன்பாகவே நாம் இங்கிருக்கிறோம். நாம் வழக்கமாக செய்வது போல தேவனுடைய நித்திய வார்த்தையிலிருந்து சிலவற்றை நாம் வாசிக்கப் போகிறோம். மேலும் நான் ஒரு காரியத்தை சொல்ல... விரும்புகிறேன். நமக்கு ஒரு காரியம் இருக்கிறதென்று அவர்கள் சொன்னார்களென்று நான் விசுவாசிக்கிறேன். ஊழியர்களின் சிற்றுண்டி இன்னும் மற்றவைகளை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா-? ஆம், அது சரியே. இன்று இரவு ஆதியாகமத்திலிருந்து சிலவற்றை நாம் வாசிக்கப் போகிறோம். 11-ஆம் அதிகாரம் 5-ஆம் வசனத்தை நாம் வாசிக்கும் போது நீங்கள் அதை கவனிக்கும்படி நான் விரும்புகிறேன். மனுபுத்திரர் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறதற்குக் கர்த்தர் இறங்கினார். அப்பொழுது கர்த்தர் இதோ ஜனங்கள் ஒரே கூட்டமாய் இருக்கிறார்கள். இன்று இரவு "ஐக்கியத்தின் ஒருமைப்பாடு” என்ற தலைப்பின் கீழ் பேச விரும்புகிறேன். 7. இப்பொழுது இந்த நற்செயலை தூண்டும்படியான வார்த்தைக்கு உள்ளாக நாம் நேராக கடந்து செல்லும் பொழுது, மேலும் இப்பொழுது, நான்...... இங்கு ஜனங்கள் ஒருமனதோடு இருப்பதை, இந்த ஜனங்களை அவ்விதமாக பார்ப்பது அது எவ்வளவு வியப்பாக இருக்கிறது. நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் அது தேவனுடைய திட்டமாய் இருக்கிறது. ஜனங்கள் ஒருமனதோடு இருப்பதை தேவன் விரும்புகிறார். அது யோசிப்பதற்கு எவ்வளவு வினோதமாக இருக்கிறது. ஆனால் பிசாசு தன்னுடைய திட்டத்தை முயற்சித்து, ஜனங்கள் அவனுடைய திட்டத்திற்குள் ஒரு மனதோடு இருக்கும்படியாக செய்கிறான். 8. இப்பொழுது தேவன் ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார், பிசாசும் ஒரு திட்டத்தை வைத்திருக்கிறான். தேவன் தம்முடைய திட்டத்தில் ஜனங்கள் ஒருமனதோடு இருக்கும்படியாக முயற்சிக்கின்ற நேரத்தில் பிசாசு தன்னுடைய திட்டத்தின் கீழ் ஜனங்கள் ஒருமனதோடு இருக்கும் படியாக முயற்சிக்கிறான். ஆகையால் உலகத்தில் இரண்டு பெரிய ஆவிகள் இருக்கிறது. அவைகளில் ஒன்று பிசாசின் ஆவி மற்றொன்று தேவனுடைய ஆவி. 9. தேவன் செய்தியாளர்களை வைத்திருக்கிறார். பிசாசும் செய்தியாளர்களை வைத்திருக்கிறான். நாம் யாருக்கு நம்மை விட்டுக் கொடுக்கிறோம், நாம் யாருக்கு ஊழியக்காரராய் இருக்கிறோம் என்பதை தெரியப்படுத்த, அதை நாம் தெரிந்து கொள்ளும்படியாக விடுதலையை பெற்றிருக்கிறோம். கடந்த ஞாயிறன்று ஜனங்களுக்கு உள்ளாக இருக்கின்ற தாகம், மனிதனுக்குள்...... தேவன் மனிதனை தாகத்தோடு இருக்கும்படியாக சிருஷ்டித்தார், அவரின் மீது தாகமாய் இருக்கும்படியாக. அதினிமித்தமாகத்தான் மனிதனுக்குள் தாகம் வைக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் பிசாசு தொடர்ந்து வந்து, நாம் பாதையை விட்டு வழுவி செல்லும்படியாகவும், உலகத்தின் காரியங்களின் மூலமாக தன் மீது தாகமாயிருக்கும் படியாக செய்து விடுகிறான். 10. "உலகத்திலும், உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூர்ந்தால் பிதாவினுடைய அன்பு உங்களிடத்தில் இல்லை என்று வேதம் சொல்லுகிறது. பிறகு நீங்கள் பார்க்கிறீர்கள், பிசாசு தாறுமாறாக்கு- கிறான். அவனால் எதையும் சிருஷ்டிக்க முடியாது. ஆனால் தேவன் ஏற்கனவே சிருஷ்டித்து வைத்திருக்கிறதை அவனால் தாறுமாறாக்க முடியும். பிசாசு சிருஷ்டிக்கிறவனல்ல, அவன் மூல சிருஷ்டிப்பை தாறுமாறாக்குகிறவன். பாவம் என்றால் என்ன-? அது நேர்மையானதை தாறுமாறாக்குவது. எத்தனைப்பேர் அதை விளங்கிக்கொள்ளுகிறீர்கள். பாருங்கள்-? நல்லது, அதை குறித்து நான் ஆச்சரியப்படுகிறேன். 11. நான் மேற்கு பகுதியை சேர்ந்தவன், நான் அதை காட்டிலும் சற்று அதிகமாகவே செயல்படுகிறேன். கிழக்கு ஜனங்கள் மாற்றங்களை ஏற்று கொள்ளாதவர்களாய் இருப்பார்கள். மேலும் நான் அநேக காலமாக மேற்கு பகுதியில் இருந்த மட்டும்... நீங்கள் என்னுடைய மேற்கு பகுதி வழிகளிலேயே என்னை உபயோகப்படுத்த முடியும் அல்லது உங்களுடைய யாங்கி வழியில் என்னை நீங்கள் நடத்த வேண்டும். ஆனால் நாம் யுத்தத்தில் வென்று விட்டோம் என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். ஆம், அதை குறித்து எந்த வித வாக்குவாதமும் நம்மிடத்தில் இல்லை. மேற்கு பகுதியை சேர்ந்த ஒருவர் வாழ்கிறார். அங்கு யாங்கீக்கள் ஒருவருமில்லை. ஆதலால் நாம் போரில் வெற்றிப் பெற்றோம். 12. அந்த சிறிய யாங்கி மரித்துக் கொண்டிருந்த போது அது மனதில் மிகவும் ஆழமாக பதிந்தது என்று நான் நினைத்தேன். அந்த மேற்கு பகுதியை சேர்ந்தவர் "கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக; யாங்கி, அதிசீக்கிரத்தில் நான் உன்னை சந்திப்பேன் என்று நினைக்கிறேன்” என்று ஒரு தந்தி அனுப்பி இருந்தார். அது தான், ஏன் அவர்கள் ஆரம்பத்திலேயே அவ்விதம் நினைக்கவில்லை (நீங்கள் பார்த்தீர்களா) மேலும் அதை அவ்விதமாகவே அதை விட்டு விட்டார்களா-? ஆனால் நான் அதை சொல்ல விரும்புகிறேன், அங்கு ஒரே ஒரு..... போரில் வெற்றிப் பெறுவதற்கு ஜீவியத்தில் ஒரு காலகட்ட நேரத்தை எடுத்துக் கொண்டது. ஆனால் முடிவிலே அதை நாம் பெற்றுக் கொண்டோம். அது சரி. ஆனால் ஒரு பெரிய நேரமானது வந்துக் கொண்டிருக்கிறது. 13. மேலும் இப்பொழுது, சத்துருவைக் குறித்துப் பேசும் பொழுது, அவன் நேர்மையை எவ்விதம் நேர்மையின்மையாக தாறுமாறாக்குகிறான்... இப்பொழுது ஆண்களும், பெண்களும் கலந்த திரள் கூட்டமாய் இருக்கிறோம். இதில் அதிகமானவர்கள் வாலிபர்கள், ஆதலால் நீங்கள் புரிந்துக்கொள்ளுவீர்கள் என்பது நிச்சயம். உங்களுடைய வைத்தியர் இடத்தில் கவனமாக கேட்கிறீர்கள். நான் உங்களுடைய சகோதரன். 14. ஒரு மனைவியை தெரிந்துக் கொண்டு, அவளுடன் வாழ்க்கை நடத்துவதற்கு, ஒரு மனிதனுக்கு அது சட்ட ரீதியாகவும், நியாய மானதாகவும், தேவனால் அனுமதிக்கப்பட்ட காரியமாகவும் இருக்கிறது. ஆனால் மற்ற ஸ்திரீயும் அவனுக்கு அவ்விதமாகவே இருக்கக்கூடும். ஆனால் அவளை தொடுவது அவனுக்கு மரணமாய் இருக்கிறது. அங்கே தான் வித்தியாசமிருக்கிறது. நேர்மையானது தாறுமாறாக்கப்பட்டிருக்கிறது. 15. எல்லா பாவத்தினுடைய வழியும் அவ்விதமாகவே இருக்கிறது. நேர்மை தாறுமாறாக்கப்படுதல். தேவன் உங்களை அவர் பக்கமாக தாகமாய் இருக்கும்படியாக சிருஷ்டித்தார். அவருடைய இராஜ்ஜியத்தின் கீழாக ஒருமனதோடு இருக்கும்படியாக சபையை அவர் வைத்திருக்கிறார். ஆனால் பிசாசு அவனுடைய இராஜ்ஜியத்தின் கீழாக ஒன்றாயிருக்கும்படியாக செய்கிறான். 16. மேலும் இப்பொழுது, முகமதிய மதத்தில் சில காரியங்களை நீங்கள் கவனிப்பீர்களானால்... நீங்கள் சற்று நேரத்தை எடுத்துக் கொண்டு, அங்கிருக்கும் காரியங்கள்... எவ்விதமாக அவர்கள் தாறுமாறாக்கப் பட்டிருக்கிறார்கள். முகமதிய மதத்தில் (முகமதின் கல்லரையின் அருகே நான் பார்வையிடும்படியான ஒரு சிலாக்கியம் கிடைத்தது.) இரண்டாயிரம் ஆண்டுகளாக அவருடைய கல்லரையினருகில் ஒரு வெள்ளை நிற குதிரை நின்றுக் கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கும் (அவ்விதமாகத் தான் என்று நினைக்கிறேன்) அவர்கள் காவலாளரை மாற்றுகிறார்கள். ஒரு வெள்ளை குதிரை சேணம் வைக்கப்பட்டு மொகமதினுடைய உயிர்த்தெழுதலுக்காக காத்துக்கொண்டு இருக்கிறது. அவர் மரணத்தினின்று உயிரோடு எழுந்து, குதிரையின் மீது ஏறி உலகத்தை ஜெயிப்பார் என்று சொல்லுகிறார்கள். 17. பிறகு, நீங்கள் பாருங்கள், வெள்ளை குதிரையில் சவாரி செய்து வெற்றி சிறப்பவரை அவர்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அது வேத வாக்கியத்திற்கு எவ்வளவு முரணாய் இருக்கிறது, ஏனென்றால் வெள்ளை குதிரையில் சவாரி செய்துக் கொண்டு இயேசு வருவார். அவருடைய வஸ்திரம் இரத்தத்தால் தோய்க்கப்பட்டிருக்கும். அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே. ஆனால் நீங்கள் பாருங்கள் பிசாசு அதை அறிவியலின் மூலமாக எடுத்து முகமதியற்கு அதை தாறுமாறாக்கியிருக்கிறான். ஆனால் உண்மையாக இயேசு வெள்ளை குதிரை மீது வருவார். அவர் அவ்விதம் செய்வார் என்று வேதம் சொல்லுகிறது. நீங்கள் விரும்புகிற விதத்தில் ஒரு தவறான மத கோட்பாட்டை நீங்கள் எடுத்துக்கொள்ள முடியும். அங்கு உண்மை கிறிஸ்தவத்தின் பலமகத்தான அடையாளங்களை நீங்கள் காண முடியும். 18. பாபிலோனின் கோபுரத்தில், நீங்கள் அந்த கோபுரத்தை கவனிப்பீர்களானால்... அதுதான் பாபிலோனின் துவக்கமாய் இருந்தது. கர்த்தருக்கு சித்தமானால், பிறகு இந்த வாரத்தில் அதை குறித்து நான் பேசுவேன். பாபிலோன், அந்த முக்கியமான பட்டினம் பரலோகத்திற்கு ஒப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அங்கே யூஃப்ரிடஸ் நதியானது சிங்காசனத்திலிருந்து வழியும் படியாக அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் அந்த தோட்டம், தொங்கு தோட்டங்கள், அது பரலோகத்தில் இருக்கும் வண்ணமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஜீவ நதியானது தேவனுடைய சிங்காசனத்திலிருந்து வழிந்தோடுகிறது, நீங்கள் பாருங்கள், மனிதனின் திறமையினால் ஒரு வடிவமைப்பை கொண்டு இருக்கிறது. தாறுமாறாக்கப்படுதல். 19. அதன் பிறகு இந்த மகத்தான காரியத்தில் அவர் நிம்ரோத் என்னும் பெயருடையவனை அவர்கள் உடையவர்களாய் இருந்தார்கள். அந்த நிம்ரோத் மற்ற எல்லா பட்டணங்களையும், மற்ற எல்லா தேசங்களையும் ஒரு பெரிய இராஜ்ஜியத்தின் கீழாகக் கொண்டு வந்துக் கொண்டிருந்தான். அது ஒரு மனிதனால் ஏற்படுத்தப்பட்ட அறிவியல் என்று காண்பித்துக் கொண்டிருந்தான். சரியான ஒரு வடிவமைப்பு. ஆனால் தேவனுடைய சபையானது தேவனுக்கு கீழாக ஐக்கியப்பட்டிருக்கிறது. அதில் மனிதனுக்கு செய்வதற்கு ஒன்றும் இல்லை. அது தேவனுக்கு கீழாக ஐக்கியப்பட்டிருந்தது. 20. இந்த பாபிலோன், ஆதியாகமத்தில் சிருஷ்டிப்பினில்... துவக்கத்தில் இருந்த ஒன்று..... அது வெளிப்படுத்தின விசேஷம் வரை செல்லுகிறதை நாம் காண்கிறோம். இந்த கடைசி காலத்தில் இப்பொழுதிருக்கிற இந்த போதகர்களின் கீழிருக்கிற உலகம், கடைசியாக அந்திக் கிறிஸ்துவுக்குள்ளாக ஐக்கியமாவார்கள். மனிதனால் ஏற்படுத்தப்பட்ட ஒரு மதம். ஆனால் தேவனுடைய சபையும் கூட ஒரு தலைவனின் கீழாக தேவனுடைய ஐக்கியத்திற்குள்ளாக வரும் என்று சொல்லிக் கொள்வதற்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஆனால் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மதங்கள் இந்த அந்திக் கிறிஸ்துவின் மதத்திற்கு உள்ளாக வரும். 21. அவர்களில் இரண்டு அமைப்புகள் இருக்கப் போகிறார்கள். ஒரு அமைப்பு ரோமாபுரியிலிருந்து வரும். அது மிருகமாயிருக்கப் போகிறது. அந்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் இருக்கிறது. இந்த பிராட்டஸ்டன்ட் சபைக்கு அது போதகரின் தலைமையாய் இருக்கப் போகிறது. ஸ்தாபனங்கள் உலகத்தின் கீழாக, மிருகத்திற்கு ஒப்பாக இந்த சொரூபம் உயர்ந்து கொண்டே போகும். இவையெல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய இராஜ்ஜியத்தின் கீழாக வரும். மேலும் கிரீடம் சூட்டப்பட்டவனாய் அங்கே உட்கார்ந்திருக்கப்போகிறான். இந்த அந்திக் கிறிஸ்து "எதிராக" ஏறக்குறைய சரியாக, ஆனால் இன்னுமாக அவனுடைய போதனைகள், வேத வாக்கியங்களை சார்ந்து இருக்காது. அநேக வேத வாக்கியங்கள் உண்மை என்று சொல்லப்படும் அளவிற்கு, அவ்வளவு தத்ரூபமாக அதைப் போலவே இருக்கும். ஆனால் அவை யாவும் தவறாய் இருக்கும். 22. எனக்கு தெரிகிறது நீங்கள் சொல்லுகிறீர்கள் "சகோதரன் பிரன்ஹாம் நீர் இப்பொழுது ரோமாபுரியை குறிப்பிடுகிறீரா-?" சரியாக அப்படி தான், ரோமாபுரி மாத்திரமல்ல, ஆனால் பிராட்டஸ்டன்டை சார்ந்தவர்களும் கூட. அது சரியாகவே இருக்கிறது. வேதம் அவ்விதம் சொல்லுகிறது. ஆனால் நீங்கள் அங்கிருக்கிறீர்கள். பிசாசு ஒரு தலைமையின் கீழாக ஜனங்களை ஒன்றுபடுத்திக் கொண்டிருக்கிறான். ஒரு மதத்தின் தலைவன், பூமியிலிருக்கும் ஒரு மனிதன். 23. தேவனுடைய ஆலயத்தில் அவன் ஒரு தேவனைப் போல் வீற்றிருப்பான். தான் தேவன் என்பது போல காண்பிப்பான். அவன் எப்படி ஒருங்கே மூன்று கிரீடங்கள் சூட்டப்பட்டவனாகவும் இன்னும் இப்படிப்பட்ட காரியங்களையும் அவன் செய்வான். பரலோகத்தின் தேவனுக்கு பதிலாகவும், பூமிக்கும், இறந்த ஆத்துமாவை தூய்மைப் படுத்துமிடத்திற்கும், ஜனங்கள் அதை குறித்து கவலைப்படுவது இல்லை... அவர்கள் அப்படி இருப்பதாக தெரியவில்லை... அவர்கள் உடைய இருதயமானது தேவனை விட்டு தூரமாக, தூரமாக சென்றுக் கொண்டே இருக்கிறது. உலகமானது மிகவும் குளிர்ந்த நிலைக்கு சென்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் வித்தியாசமான காரிங்கள், ஏனென்றால் இவ்விதமான மகத்தான போதகர்களின் தலைமைகள் உருவாகிக் கொண்டிருக்கிறது. 24. ரஷ்யாவில், ரஷ்யா கம்யூனிஸத்திற்கு கீழாக உலகத்தை ஓன்று படுத்த முயற்சிக்கிறது. ரஷ்யா..... ரஷ்யாவை பிசாசு தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்து, உலகத்தை கம்யூனிஸத்திற்குள் ஒருமைப்பாட்டிற்குள் கொண்டு வரும்படியாக முயற்சிக்கிறான். அதை அவர்கள் செய்ய முடியாது. மேலும் அதன் பின் யு. என், யுனைடட் நேஷன்ஸ், காவல்துறை இயக்க சங்கத்தின் கீழாக ஒன்றுபடுத்தி கொண்டு வரும்படியாக முயற்சிக்கிறது. மனிதனால் ஏற்படுத்தப்பட்ட இன்னொரு இயக்கம். அது கிரியை செய்யாது அதனால் முடியாது. ஆனால் ஒவ்வொருவரும் முயற்சிப்பார்கள். 25. மரியாதையோடுகூட நான் இதை சொல்லட்டும், தேவனுடைய வார்த்தையின்படியாக, ஒவ்வொரு தேசமும் பிசாசின் ஆதிக்கத்திற்கு உள்ளாக செயல்படுகிறது. வேதம் அவ்விதம் சொல்லுகிறது. சாத்தான் உலகத்தின் இராஜ்ஜியங்களை கர்த்தருக்கு காண்பித்து, "இவை எல்லாம் என்னுடையது, அவர்களுக்கு செய்ய விரும்புகிறவைகளை அவர்களுக்கு செய்கிறேன் நீர் என்னை தொழுதுக் கொள்வீரானால், இவை எல்லாவற்றையும் உமக்கு தந்து விடுகிறேன்.” ஆயிர வருட அரசாட்சியில் அவர் அவர்களுக்கு சுதந்திரவாளியாகப் போகிறார் என்பதை அறிந்தவராய் “எனக்கு பின்னாக போ சாத்தானே” என்றார். 26. கிறிஸ்துவினால் உலகமானது ஆளுகை செய்யப்பட்டிருக்குமானால் நாம் நம்முடைய கரங்களை தொடர்பற்ற நிலைக்கு கொண்டு வருவோம், அடுத்த புல்லட்டானது வெடிக்க முடியாது. செயற்கைக் கோளானாலும் இன்னும் ஹைட்ரோஜன் குண்டுகளானாலும் ஜனங்களை அழிப்பதற்கு நாம் உபயோகப்படுத்த அவசியமிருக்காது. கிறிஸ்து, இராஜாதி இராஜாவாக, கர்த்தாதி கர்த்தாவாக உலகத்தை ஆளுகை செய்யும்படியாக எடுத்துக்கொள்ளும் பொழுது, ஒரு மகத்தான ஆளுகையின் கீழாக அவருக்குள் ஜனங்கள் ஒருமைப் பாட்டிற்குள்ளாக வருவார்கள். அப்படிப்பட்ட நேரம் இருக்கப் போகிறது. 27. எல்லா தேசங்களும், ஜனங்களும் ஒருமைப்பாட்டிற்குள்ளாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறது. ஜெர்மனி, எல்லோரும் ஜெர்மானியர்-களாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறது. ரஷ்யா எல்லோரும் ரஷ்யர்களாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறது. மேற்கத்திய நாடு எல்லோரும் அதற்குள்ளாக வரவேண்டும் என்று விரும்புகிறது. அவர்கள் பாபிலோனில் செய்தது போல அவர்களெல்லாரும் ஒரே பாஷையை பேசவேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் ஒரே பாஷை இருக்கிறதென்று இயேசு சொன்னார், மேலும் அவர்களெல்லோரும் ஒரே பாஷையை பேச வேண்டுமென்று அவர் விரும்புகிறார். 28. எல்லாமே ஒருங்கிணைந்த, ஒரே நபர் அவர்களுக்கு தேவையாய் இருக்கிறது. ஆனால் அது மனிதனின் ஆதிக்கத்திற்குள்ளாக ஒரு போதும் வரப்போவதில்லை. ஆனால் நான் இதை சொல்லிக் கொள்ளுகிறேன், எல்லா நாடுகளும் ஒரு இராஜாவின் கீழ் ஒருங்கிணைந்தவர்களாக இருக்கப்போகின்ற ஒரு நேரமானது வந்துக் கொண்டிருக்கிறது. அவர், தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து. அவர்கள் ஒரே பாஷையை பேசுவார்கள். அவர்கள் இருதயத்திலும், நோக்கத்திலும் ஒன்றாக இருப்பார்கள். 29. தானியேல் உலகத்தின் முடிவிலே, கைகளால் பெயர்க்கப்படாத அந்த கல் அந்த மலையிலிருந்து பெயர்க்கப்படும் என்பதை பார்த்தான். 30. அது உலகத்தின் இராஜ்ஜியங்களின் மீது மோதி அதை நொறுக்கிப் போட்டது. அவர்கள் தரையில் குப்பை கூளமாக மாறிப்போனார்கள். உமியானது காற்றினால் அடித்து செல்லப்படுவது போல காணப் பட்டார்கள், ஆனால் அந்த கல் உலக முழுவதையும் மூடிப்போட்டது. 31.அந்த கல் கிறிஸ்துவே. 32. சபைகள், ஸ்தாபனங்கள், தேசங்கள், ஐ.நாடுகள் அது என்னவாயிருந்தாலும், அவையெல்லாம் அமிழ்ந்து போகிறதான மணல். அவையெல்லாம் ஒரு முடிவுக்குள்ளாக வரவேண்டும். எனக்கு ரோமாபுரியில் நிற்கும்படியான ஒரு சிலாக்கியம் கிடைத்தது. அந்த மகத்தான ஸீஸர் ரோம சாம்ராஜ்ஜியத்திற்குள் உலகமனைத்தையும் ஒருமைப்பாட்டிற்குள்ளாக கொண்டு வரும்படியாக முயற்சித்தவர். இப்பொழுதோ அழிந்து போனதான அந்த பட்டணத்தை கண்டுபிடிக்க நீங்கள் 20 அடி ஆழம் தோண்டியாக வேண்டும். 33. அந்த மகத்தான பார்வோன் உலகமனைத்தையும் எகிப்துக்குள் கொண்டு வர முயற்சித்த அந்த எகிப்தில் நான் நின்றிருக்கிறேன். அந்த அழிந்துபோன பட்டினத்தை நீங்கள் காணவேண்டுமானால் 20 இன்னும் 30 அடி ஆழத்திற்கு நீங்கள் தோண்டி பார்க்க வேண்டும். எனென்றால் இங்கு நிலையான நகரம் நமக்கு கிடையாது. ஆனால் ஒரு நகரம் வர நாம் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறோம். 34. சில நாட்களுக்கு முன்பு நான் சிறு பையனாக இருந்த போது, நான் ஒரு இடத்திற்கு சென்றிருந்தேன். அங்கே நான் வழக்கமாக சென்று அந்த குறிப்பிட்ட மரத்தடியில் உட்காரும் ஒரு பெரிய மரத்தை நான் பார்த்தேன். நான் வயது சென்றவனாகும் போது, இப்பொழுது நான் 12 வயது சிறுவனாக இருந்து இந்த மரத்தின் கீழிருந்து நான் பார்க்கிற வண்ணமாக அதனுடைய அழகை பார்ப்பேன் என்று நினைத்துக் கொண்டேன். அந்த மரத்தின் ஆபத்துண்டாக்கும் பாறை பகுதியை தவிர வேறு ஒன்றும் அங்கு விட்டு வைக்கப்படவில்லை. ஏன்-? தொடர்ந்து செல்லக்கூடியது இங்கு ஒன்றுமில்லை. அவை அழிந்து போகத்தான் வேண்டும். ஒவ்வொரு அழிந்து போகக்கூடிய காரியமும், அழிந்து போகாத ஒன்றை குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் நாம் காண்கிறதான ஒவ்வொரு காரியமும் உண்மை யான காரியத்தினுடைய தாறுமாறாக்கப்பட்ட நிலைகளையே நாம் பார்க்கிறோம். 35. நான் ஒரு ஜோடிக்கு திருமணம் செய்து வைத்தேன். அழகான ஒரு வாலிபப் பெண், அவளுடைய முகம் சிவந்து வெட்கப்படக்கூடிய வயதிலிருந்தாள், ஒரு வாலிபன் தன்னுடைய தோள்களை பின் தள்ளியிருந்த வண்ணமாக, அவர்கள் ஒன்றாக அவர்கள் இருந்த வண்ணமாக நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் இருதயம் இணைந்த வண்ணமாக இருதய துடிப்போடு காணப்பட்டனர். நான் நினைத்தேன் மரணமானது "இதுவரை பார்த்திராத விதமாக அந்த காட்சியானது அவ்வளவு அழகு நிறைந்ததாய் இருந்திருக்குமல்லவா". ஆனால் சில வருடங்களுக்குள்ளாக அவர்களுடைய தலைமயிர் வெண்மையாக மாறிபோகிறது மறுபடியுமாக திரும்பவும் மண்ணுக்கு போகிறார்கள். அது என்னவாயிருக்கிறது-? அவர்கள் அவ்விதமாக நிற்கக் கூடிய வேளையில், நதிக்கு அப்பால் அங்கே ஒரு தேசம் இருக்கிறது. அங்கே மரணத்தினுடைய அறிகுறிகள் எல்லாம் எடுக்கப்பட்டுப்போம். அங்கே அழிவில்லாதவர்கள் அவருடைய சாயலை அணிந்தவர்களாய் நிற்பார்கள். சூரியனும், நட்சத்திரங்களும் அதிகமாக ஒளியை கொடுத்துக் கொண்டிருக்கும். 36. அந்த மகத்தான விடிவெள்ளி நட்சத்திரத்தை கர்த்தர் தம்முடைய கரங்களிலிருந்து வீசச்செய்து, விண்ணில் தொங்க வைத்ததிலிருந்து, அது தன்னுடைய அழகில் ஒரு சிறு காரியத்தையும் இழந்து விடவில்லை. ஆனால் சில வருடங்கள் நமக்கு என்ன செய்திருக்கிறது என்று பாருங்கள். அவர் தம்முடைய வேத வாக்கியங்களில் என்ன சொல்லியிருக்கிறார்-? அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள், நட்சத்திரங்களை போல பிரகாசிப்பார்கள். ஆதலால் நாம் ஒரு தேசத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறோம். அதனை கட்டுபவரும், செய்பவரும் தேவன். 37. ஒரு பொருளை உங்களுடைய சிந்தையில் கட்டி எழுப்ப முயற்சிக்கிற அந்த மகத்தான காரியத்தை நீங்கள் பார்த்த பிறகு, அங்கே ஒரு சத்துரு கிரியை செய்து கொண்டிருக்கிறதை நீங்கள் பார்க்க வேண்டுமென்று நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். கிறிஸ்துவினுடைய ஆவி எதை செய்ய முயற்சிக்கிறதோ, அவ்விதமாகவே சத்துருவும் தாறுமாறாக்கப்பட்ட ஆவியின் மூலமாக அதையே செய்யமுயற்சிக்கிறான். (அதற்காகவும், அதற்கு மாறாகவும்.) அவ்விதமாகவே சத்துருவும் ஒரு மகத்தான தலைமையின் கீழாக உலகமனைத்தையும் ஒன்றுபடுத்த முயற்சிக்கிறான். உலகம் அனைத்தும், ரஷ்யா, ஐ.நாடுகள் யாவும் அதையே செய்துக் கொண்டிருக்கிறது. இப்பொழுது நான் இன்னும் சற்று தொடர்ந்து செல்லட்டும். சபையானது மனிதனால் ஏற்படுத்தப்பட்டதை நிறுவுவதின் கீழாக அதை செய்ய முயற்சிக்கிறது. 38. அது கிரியை செய்யாது, அது தேவனுடைய திட்டமில்லை. அவருடைய வார்த்தையிலிருந்து நான் அதை நிரூபிக்க முடியும். ஆனால் உங்களுக்கு தெரியுமா-? நீங்களாக விரும்பி தீர்மானம் எடுக்கும்படியாகவும், அதன் மூலமாக அவர் தம்முடைய நற்பண்புகளை உங்களில் நிரப்பும்படியான நிலையிலிருக்கும் மனிதனாக தேவன் உங்களை உருவாக்கியிருக்கிறார். இப்பொழுது ஒரு மனிதன் ஏதோ ஒன்றினால் அவன் முழுமையாய் இருக்க வேண்டும்..... அது சரியே. 39. இது தெரிந்துகொள்ளும் நேரமாக இருக்கிறது. நீங்கள் இனிமேலும் அதிக காலம் தனித்து நிற்கமுடியாது. செய்தியானது முடிவதற்கு முன்னால் நீங்கள் ஒரு வேளை கடந்து போகலாம். ஆனால் நீங்கள் வந்த வண்ணமாக அந்த வாசல் வழியாக நீங்கள் திரும்பி செல்ல முடியாது. அது சரியே. இந்த இரவில் அந்த நுழைவாயிலை நீங்கள் கடந்து, ஒருவேளை நீங்கள் சற்று சிறப்பான நபராகவோ அல்லது நீங்கள் உள்ளே நுழைந்த நிலைக்கு அதிகமாக பொல்லாங்கு செய்யக் கூடியவராகவோ செல்லக்கூடும். அதற்கு நீங்கள் உதவி செய்ய முடியாது. நீங்கள் தீர்மானம் எடுக்கும்படியாக அது உங்களை சார்ந்ததாய் இருக்கிறது. இப்பொழுது கவனியுங்கள், இது தெரிந்துக் கொள்ளுதலின் நேரம். நீங்கள் தனித்திருக்க முடியாது. 40. இது ஒரு தெரிந்துக் கொள்ளுதலின் நேரம். நீங்கள் யாரை சேவிக்கப் போகிறீர்கள் என்பதை நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். நீங்கள் விரும்புவீர்களானால் நீங்கள் தெரிந்துக்கொள்ளும்படியாக பிசாசு அநேக பகட்டான காரிங்களை உங்களுக்கு முன்பாக வைத்து இருக்கிறான். நீங்கள் இருக்கிற விதமாகவே இருக்க முடியாது. ஏனென்றால் நீங்கள் அதை செய்து தான் ஆக வேண்டும்... நீங்கள் வெறுமையாக இருப்பீர்களானால்...... 41. இப்பொழுது இது நமது மத்தியில் தங்கியிருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். வித்தியாசமாய் இருக்க வேண்டுமென்பதற்காக நான் இதை சொல்லவில்லை. பரலோகத்தின் நல்ல கர்த்தர் அதை அறிந்திருக்கிறார், ஆனால் ஒரு உண்மையைக் காண்பிக்கும்படியாக நான் இதை சொல்லிக் கொண்டிருக்கிறேன். மேலும் உலகத்தினூடாக கடந்து செல்லும் நமது மகத்தான சுவிசேஷகர்கள்...... அதிக நாட்களுக்கு முன் இல்லாமல் நமது புகழ் பெற்ற பில்லி கிரஹாம், அவர் ஒரு தேவனுடைய ஊழியக்காரர் என்று விசுவாசிக்கிறேன். அவரோடு கூட சிற்றுண்டி அருந்தும்படியான தருணம் எனக்கு கிடைத்தது. அவர் தேசங்களை கடந்து சென்று, கிறிஸ்துவிடம் வரும்படி அவர்களுக்கு அழைப்புக்கொடுத்து, உலகமானது கிறிஸ்துவிடம் வரும்படியாகவும், மனந்திரும்பும்படியாகவும் அழைப்புக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். 42. ஒரு கூட்ட பிரசங்கியாரின் மத்தியில் அவர் இவ்விதமாக கூறினதை நான் கேட்டேன். அவர் இவ்விதமாக வேதத்தை கரத்தில் எடுத்துக் கொண்டு அவர் சொன்னார் "இது தான் உதாரணம், மேலும் அவர் சொன்னார், பவுல் ஒரு பட்டினத்திற்குள் சென்று ஒருவனை மனந்திரும்ப செய்தார். ஒரு வருடம் கழித்து மறுபடியும் அவன் வந்த போது முப்பது பேர் மனந்திரும்பினார்கள்”. நான் ஒரு பட்டினத்திற்குள் சென்று இருபதினாயிரம் பேர் வந்தார்கள். நான் ஒரு வருடம் கழித்து அங்கு வந்தபோது இருபது பேர் கூட மனந்திரும்பவில்லை என்று அவர் சொன்னார். 43. ஓ, நான் எப்படியாக ஒரு காரியத்தை சொல்ல விரும்பினேன். ஆனால் அது அவருடைய கூட்டமாயிருந்தது. பில்லி-கிரஹாம் அவருடைய செய்தியை வைத்து ஜனங்கள் மனந்திரும்பும்படியாகவும், பாவத்திலிருந்து திரும்பி வரும்படியாகவும் அவர் சொல்லிக் கொண்டு இருக்கிறார். அது மிக முக்கியமான ஒரு செய்தியாய் இருக்கிறது. அதை செய்வதற்கென்றே தேவன் பில்லிகிரஹாமை தெரிந்தெடுத் திருக்கிறார். வேறொருவரும் அவர் செய்கிற விதமாக செய்ய முடியாது. ஏனென்றால் அவர் கர்த்தரை பின்பற்றி செல்லுகிறார். அவர் யோவானுடைய ஆவியை உடையவராய் இருந்தார். அந்த யோவான் கிறிஸ்துவின் வருகைக்கு முன்னோடியாக சென்று, மனந்திரும்பும் படியாக பிரசங்கித்து ஒரு அற்புதத்தையும் செய்யவில்லை. ஆனால் அவன் பிரசங்கித்து அந்த பிரதேசங்களை கலக்கி அவர்களை அடுத்த செய்திக்கு ஆயத்தப்படுத்தினான். 44. ஆனால் இன்றோ நமதருமை சகோதரன் பில்லி கிரஹாம் ஜனங்கள் தங்களுக்கு தாங்களே பாவத்தின் குவியலாக இருக்கும்படியாக செய்கிறார். மீண்டுமாய் நிரப்பப்படும்படியான செய்தி அவரிடத்தில் இல்லை. அது தான் காரியமாய் இருக்கிறது. நீங்கள் குப்பை குவியலாக இருக்கிறீர்கள், ஆனால் உங்களுடைய சகோதரன் என்ற முறையில் தாழ்மையோடு உங்களோடு பேசட்டும். "ஒரு அசுத்த ஆவி ஒரு மனிதனிடத்திலிருந்து வெளியே போகும்போது, அது வறண்ட இடங்களில் அலைகிறது. வேறு வார்த்தையில் சொல்ல வேண்டும் ஆனால், அது இளைப்பாறுதலைத் தேடி எல்லா இடங்களிலும் சுற்றி திரிகிறது. அந்த ஆவி யாரையாவது ஒருவரை கண்டுபிடித்து, அவர் மூலமாய் பேசுவதற்கு முன்னால், அவருக்குள்ளாய் ஜீவிப்பதற்கு முன்னால் அந்த ஆவி அவ்வளவு மோசமானது அல்ல. 45. சற்று சமீபத்தில் நடந்த கூட்டத்தில் அந்த ஆவியை என்னால் உணர முடிந்தது. கூட்டத்தின் முதல் நாள் இரவு அல்லது இரண்டாம் நாள் அது ஒரு விதமான மனம் சார்ந்த நிலை என்று நம்பினீர்கள். இப்பொழுது அதை அறிந்த பிறகு அதற்காக மன்னிப்பு கடிதங்களை அதற்கு சம்பந்தமானவர்கள் அனுப்பிக் கொண்டிருக்கிறீர்கள். நிச்சயமாக நான் உங்களை மன்னிக்கிறேன். தேவன் அவ்விதமாகவும் செய்கிறார். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நிச்சயமாக. 46. இப்பொழுது கூட்டம் நடந்துக் கொண்டிருக்கும்போது, கூட்டத்தில் இருக்கும் ஒரு அசுத்த ஆவி, யாரையாவது ஒருவரை பிடித்துக்கொண்டு அவர் மூலமாய் கிரியை செய்வதற்கு முன்னால், அந்த ஆவி ஏறக்குறைய தீங்கு விளைவிக்காது. பின்பு அவர் மூலமாய் கிரியைச் செய்ய ஆரம்பிக்கும் பொழுது நிச்சயமாக அது பாதிப்பை உண்டு பண்ணும், ஏனென்றால் அது ஒரு அசுத்த ஆவி. மேலும், புரிசுத்த ஆவியானது இங்கு இருக்கிறது. யாரோ ஒருவர் மூலமாக கிரியை செய்ய முயற்சிக்கிறது, அவ்விதமாக கிரியைச் செய்யும்படி ஒருவரை கண்டு பிடிக்கும் போது, அது நன்மையானதை செய்யும். 47. இந்த இரண்டு ஆவிகளையும் பாருங்கள், அவைகளுடைய நோக்கங்கள், எதிர்ப்பார்ப்புகள்-? அது எவ்விதமாக இருக்கிறதென்று கவனியுங்கள். அவைகளுடைய கனிகளை கவனியுங்கள். அப்பொழுது உங்களுக்குள் எந்தவிதமான ஆவி இருக்கிறது என்பதை கண்டுக் கொள்ள முடியும். நீங்கள் ஆவியினால்... உங்களுக்கு ஆவி இல்லை என்றால் நீங்கள் மரித்தவர்களாய் இருப்பீர்கள். நீங்கள் ஒரு ஆவியை பெற்றிருப்பீர்களானால் அது உங்களுடைய ஜீவியத்தை செயல்-பாட்டிற்குள்ளாய் கொண்டு வருகிறது. உங்களுடைய ஜீவியம் ஒரு கிறிஸ்துவின் கனியைக் கொடுக்குமானால், அது கிறிஸ்துவின் ஆவி. 48. இப்பொழுது நீங்கள் ஒருவேளை நிரப்பப்பட்டிருக்கலாம். இப்பொழுது இந்த அசுத்த ஆவியை கவனியுங்கள். அவன் வெளியே போகும் போது, வறண்ட இடங்களில் அலைந்து இளைப்பாறுதலுக்காக ஒரு இடத்தை அவன் கண்டுப் பிடிக்கப் பார்ப்பான். ஆனால் கண்டு பிடிக்க முடியாது என்று வேதம் சொல்லுகிறது. ஆதலால் அவன் சொல்லுகிறான் "நான் புறப்பட்டு வந்த இடத்திற்கே மறுபடியுமாக போவேன்". அவன் முன்பிருந்த அந்த நபருக்குள் திரும்பி சென்று, அந்த வீடானது பெருக்கி சுத்தப்படுத்தி, பரிசுத்தமாக்கப்பட்டு, நிராகரிக்கப் படக்கூடிய எல்லா காரியமும் அவனிடத்திலிருந்து போயிருக்கக் கண்டு, ஒரு..சற்று உண்மையான, சந்தோஷமான விசுவாசியாய் இருக்கிறான். ஆனால் அது வெற்றிடமாயிருக்கிறது. "அவனிலும் மோசமான மற்ற ஏழு ஆவிகளை "இங்கே வாருங்கள்..... என்று அழைக்கிறான். தயவாக இதை பெற்றுக்கொள்ள முயற்சியுங்கள். அது தான் உண்மையென்று வேதம் சொல்லுகிறது. அதுதான் உண்மை என்று இயேசு சொன்னார். அவன் மறுபடியுமாக அந்த வீட்டிற்கு வருகிறான். 49. ஒரு மனிதன் கிறிஸ்துவை தன்னுடைய இரட்சகராக அறிக்கை செய்தவன், தன்னுடைய ஒழுக்கக்குறையான காரியங்களை தூக்கி எறிந்துவிட்டவன், தன்னுடைய குடிபழக்கத்தை விட்டவன், களவு செய்வதைவிட்டவன், அவன் பரிசுத்தமாக்கப்பட்டு, சுத்திகரிக்கப் பட்டிருக்கிறான். அவனுடைய வீடானது பெருக்கி சுத்திகரிக்கப் பட்டிருக்கிறது. அவன் ஒன்றையும் சாராமலிருப்பதை உணருகிறான். ஆகையால் அவன் மறுபடியும் வந்து, அந்த வீட்டைக் கண்டு பிடிக்கிறான். அவன் சென்று அவனை விட மோசமான ஏழு ஆவிகளை அழைத்து வந்து இந்த மனிதனுக்குள் வருகிறான். ஒரு மனிதனுடைய கடைசி நிலைமை அவன் முன்னிலமையைக் காட்டிலும் ஏழு மடங்கு அதிக கேடுள்ளதாய் இருக்குமென்று வேதம் சொல்லுகிறது. 50. இப்பொழுது, சரியாக என்ன நடந்தது-? ஒரு மறு சுவிசேஷகர் வருகிறார், அவர்கள் மனந்திரும்புதலை பிரசங்கிக்கிறார்கள். உங்கள் பாவங்களிலிருந்து நீங்கள் சுத்திகரிக்கப்படுகிறீர்கள். நீங்கள் சுத்திகரிக்கப்பட்ட பிறகு, பிசாசு உங்களை விட்டு போய்விடுகிறான். நீங்கள் களவாடின பொருட்களை மறுபடியும் அந்த இடங்களில் வைத்து விடுகிறீர்கள். நீங்கள் சென்று உங்களுடைய தவறுகளை உங்களுடைய மனைவியினிடமோ அல்லது கணவரிடமோ அறிக்கை செய்கிறீர்கள். நீங்கள் உண்மையாகவே சுத்திகரிக்கப்பட்டு இருக்கிறீர்கள். பின்பு அதனுடைய காரியம் என்னவாயிருக்கும் என்றால், நீங்கள் அப்படியே சுத்திகரிக்கப்பட்டவர்களாக, பிசாசுக்கு ஒரு நல்ல இலக்கை உருவாக்குகிறீர்கள். 51. இப்பொழுது, ஜனங்கள் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்ற பிறகு, அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுகிறார்கள். அது தேவனுடைய தெய்வீக திட்டமாய் இருக்கிறது. இப்பொழுது, நீங்கள் உலகத்தின் ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பீர்களானால்..... நீங்கள் விடுவிக்கப்பட்டபோது, ஒரு வேளை நீங்கள் நல்ல எண்ணங்களினா-லேயும் மற்ற காரியங்களினாலேயும் நிரப்பப்படலாம். ஆனால் நீங்கள் தேவனுடைய ஆவியினாலே நிரப்பப்படும் வரைக்கும்.... சபையை செயல்பாட்டிற்குள்ளாக கொண்டு வரும்படியாக தேவன் பரிசுத்த ஆவியை பூமிக்கு அனுப்பினார். நீங்கள் ஒரு வேளை எண்ணங்களாலே நிரப்பப்பட்டிருக்கலாம். நீங்கள் ஒருவேளை வேதஅறிவினால் நிரப்பப் பட்டிருக்கலாம். நீங்கள் ஒரு வேளை கல்வியினாலே நிரப்பப்-பட்டிருக்கலாம், அதை குறித்து எல்லாவற்றையும் அறிந்திருக்கலாம். நீங்கள் ஒருவேளை மதத்தினால் நிரப்பப்பட்டிருக்கலாம். இன்னமுமாக பிசாசுக்கு நீங்கள் ஒரு இலக்காக இருக்க முடியும். அது சரியே. 52. இப்பொழுது, தேவன் உங்களை அவ்விதம் உண்டாக்கி இருப்பாரானால், அதன் மூலம் உங்களை நீங்கள் வெறுமையாக்கக் கூடும். ஏனென்றால் நீங்கள் பிறக்கும் போது, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட ஒரு இடத்தோடு நீங்கள் உண்டாக்கப்பட்டிருக்கிறீர்கள். சுபாவத்தின்படி நீங்கள் பிசாசின் பிள்ளைகளாய் இருக்கிறீர்கள். மேலும் அந்த நேரத்தில்...... சுவிசேஷகர்கள் தொடர்ந்து வருகிறார்கள். நீங்கள் மனந்திரும்பி சுத்திகரிக்கப்படுகிறீர்கள். நீங்கள் எதை பார்க்கிறீர்கள்-? பிசாசு வருகிறதை பார்க்கிறீர்கள். அவன் மறுபடியுமாக மற்றவைகளை கொண்டு வந்து, உங்களை ஒரு சிறிய ஸ்தாபனத்திற்குள்ளாக பொருத்துகிறான். அங்கிருந்து கொண்டு “எங்கள் சபை தான் பெரிதான சபை என்று சொல்லுகிறீர்கள்”. சரியாக துவங்குவதற்கு நீங்கள் தவறாய் இருக்கிறீர்கள். பின்பு உங்களுக்கு தலைகனம் வருகிறது. பெரிய எண்ணங்கள் வருகிறது, ஏன்-? நான் வீட்டிலிருந்துக் கொண்டு தொலைக்காட்சி பார்க்கும்படியான காரியத்தில் அது என்னை கண்டனம் செய்யவில்லை. நண்பர்களோடு புகை பிடிக்க அது என்னை கண்டனம் செய்யவில்லை அல்லது அவ்வப்போது குடிக்க அது என்னை கண்டனம் செய்யவில்லை. நீங்கள் என்னவாயிருக்கிறீர்கள் என்று உங்கள் கனிகள் சொல்லும். 53. அதன் பின்பு நீங்கள் சில மத குருமார்கள் எழுந்து நின்று பேசுவதைக் கேட்பீர்கள்...... நீங்கள் ஒருவேளை வேதம் வாசித்துக் கொண்டிருக்கலாம், இயேசு எங்கே அற்புதங்களை செய்தார் என்று நீங்கள் பார்க்கிறீர்கள். அதை உங்கள் மேய்ப்பனிடத்தில் கொண்டு செல்லுகிறீர்கள். "ஓ, இப்பொழுது பாருங்கள், நாம் அதை விசுவாசிப்பதில்லை என்று அவர் சொல்லுவார்". நாம் யார்-? யார்-? அந்த, "நாம் அதை விசுவாசிப்பதில்லை". அவர்கள் யாராய் இருக்கிறார்கள்-? அது அவரும் தேவனும் அல்லவா-? ஏனென்றால் தேவன் அதை எழுதி வைத்திருக்கிறார். அது அவரும் இன்னும் மற்றவர்களும்... 54. மேலும் அதற்கு பின்னால் சென்று பார்ப்போமானால், அது பாபேல் கோபுரத்தண்டையில் இருந்த அதே மனிதனால் ஏற்படுத்தப்பட்ட உலக இராஜ்ஜியத்தின் கீழாக கட்டப்படுவது. ஆனால் தேவனுக்கு அது அவசியம் இல்லை. நீங்கள் யாவரும் மெதோடிஸ்டுகளின் கீழாகவோ, பாப்டிஸ்டுகளின் கீழாகவோ அல்லது எந்த ஒரு சபையின் மத குருவின் தலைமையின் கீழாகவோ ஒருங்கிணைந்து இருக்க வேண்டுமென்று அவர் விரும்பவில்லை. ரோமாபுரின் கீழாக எல்லோரும் ஒருங்கிணைந்திருக்க வேண்டுமென்று அவர் விரும்பவில்லை. எந்த ஒரு சபையின் ஆளுகையின் கீழாகவும் ஒருங்கிணைந்து இருக்க வேண்டுமென்று அவர் விரும்பவில்லை. பரிசுத்த ஆவியாகிய அவருடைய ஆவிக்குரிய இராஜ்ஜியத்தில் நீங்கள் ஒருங்கிணைந்து இருக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார். மேலும் பரிசுத்த ஆவியானவர் வரும் போது, உலகமானது மரித்துப் போயிருக்கும். மேலும் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தினால் நீங்கள் நிரப்பப்பட்டிருப்பீர்கள். 55. மேலும் பிசாசு உங்களிடத்திலிருந்து விலகியிருக்க வேண்டும். நீங்கள் தேவனுடைய இராஜ்ஜியத்தின் கீழாக இருக்கிறீர்கள். நீங்கள் ஒரு புது சிருஷ்டியாய் இருக்கிறீர்கள். வெற்றிடமாக இருக்கிற அந்த இடத்தில் பரிசுத்த ஆவியானவர் வந்து அதை நிரப்பிக் கொள்வார். 56. இப்போழுது ஒரு மேய்ப்பன், மற்ற சமய கோட்பாடு மற்றும் சிறிய கட்டுரையை வாசிக்கும் போது உங்களிடம் சொல்லலாம் அற்புதங்களின் நாட்கள் கடந்து போய்விட்டது என்று சொல்லலாம். அது பிசாசுக்கு அசுத்த ஆவிகளில் ஒன்றை நழுவவிடுவது ஒரு சரியான இடமாய் இருக்கிறது. அது உங்களை ஒரு மோசமான மனிதனாக்கும். நீங்கள் ஒரு பாவியாய் இருந்தபோது, நீங்கள் அவ்விதமாய் இருந்தீர்கள். ஏனென்றால் ஒரு மதரீதியான பாவி தான் மற்ற எல்லோரையும் விட மிகவும் மோசமானவன். அது தான் மிகவும் மோசமானது. இயேசு அவ்விதம் சொன்னார். அதுவே மிகவும் மோசமானது. 57. கர்த்தருடைய மகத்தான வல்லமையை பார்க்ககூடிய ஒரு கூட்டத்திற்கு ஒருவேளை நீங்கள் செல்லக்கூடும். அதை பார்க்கும் போது முதலாவது நீங்கள் சொல்லக்கூ டியது, இப்பொழுது, நான் இவற்றில் ஒன்று சேர்ந்திருப்பேனானால், சபையில் என்னுடைய கடிதத்தை அவர்கள் எனக்குக் கொடுப்பார்கள், இப்பொழுது, ஒரு வேளை அது சம்பவித்திருக்கலாம்..... 58. அவர்களுடைய அருமையான ஸ்தாபனங்கள், அருமையான போதகர்கள், பாப்டிஸ்டுகள், மெதோடிஸ்டுகள்..... தேவனுடைய இயற்கைக்கு மேம்பட்டவைகளை விசுவாசிக்கும் வித்தியாசமான பிரிவில் இருப்பவர்கள், ஒரு மனிதன் மறுபடியுமாக பிறந்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருக்க வேண்டும் என்று விசுவாசிப்பார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்காகவும் நான் தேவனை ஸ்தோத்தரிக்-கிறேன். அவர்களில் அநேகர் விசுவாசிக்கிறார்கள். ஒவ்வொரு இடத்திலும் அடைந்துகிடக்கிறதான பிள்ளைகள் தேவனுக்கு உண்டு. 59. ஆனால் நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், எல்லா சபைகளிலுமிருந்து பெரும்பான்மையானவர்கள்.... மெதோடிஸ்டு களாகிய உங்களிடம் ஏதோ ஒன்றை நான் கேட்க விரும்புகிறேன். தெய்வீக சுகத்தை நீங்கள் விசுவாசிப்பதில்லை. உங்களுடைய ஸ்தாபகர் ஜான் வெஸ்லியை குறித்தென்ன-? வியாதியாய் இருந்த ஒரு ஸ்திரீக்கு ஜெபிப்பதற்காக தன்னுடைய குதிரையில் சவாரி செய்துக் கொண்டிருந்த போது குதிரையானது ஒரு விளிம்பு பொந்தில் தடுக்கி சிக்கிக்கொ ண்டு கீழே விழுந்து தன்னுடைய காலை உடைத்துக் கொண்ட போது, ஜான் வெஸ்லி தன்னுடைய குதிரையை விட்டு கீழே இறங்கி, எண்ணை குப்பியை எடுத்து, கர்த்தாவே, நீர் என்னை உண்டாக்கிய விதமாகவே, இந்த குதிரையையும் உண்டாக்கினீர் என்று சொல்லி, குதிரையை எண்ணையால் அபிஷேகித்து, அதன் மீது ஏறி சென்று விட்டார். அதைக் குறித்தென்ன-? இன்றைக்கிருக்கிற நவீன மெதோடிஸ்ட் சபையில் இதை பிரசங்கிப்பீர்களானால், உங்களை வாசலுக்கு வெளியே தூக்கி எரிவார்கள். நிச்சயமாக. 60. ஆனால் அது என்னவென்று நீங்கள் பார்க்கிறீர்களா-? வேதத்திலிருக்கும் அந்த வயதான வேசி, தாய் (வெளி. விசேஷம் 17) அவளுக்கு குமாரத்திகள் இருந்தார்கள். நிச்சயமாக, நான் அந்த விஷயத்தை தெளிவாக்க வேண்டிய அவசியமில்லை. பிராட்டஸ்டன்டிஸம் கத்தோலிக்கயிஸத்தினுடைய உற்பத்தியாய் இருக்கிறது. நிச்சயமாக அப்படித்தான். அவர்கள் அதிகமானதை வெளியே கொண்டு வந்தார்கள். இன்னும் அதை சார்ந்தே இருக்கிறார்கள். இன்னும் தொடர்ந்து அதை செய்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆவிக்குரிய போதனையிலிருந்து வழி விலகி செல்லுகிறார்கள். அப்போஸ்தலருடைய போதனையிலிருந்து வழி விலகி செல்லுகிறார்கள். 61. அவர்கள் தாங்களாகவே அப்போஸ்தலருடைய கோட்பாடுகளை உருவாக்கிக் கொண்டார்கள். அப்பொஸ்தலர்கள் அப்படிப்பட்டதான கோட்பாட்டை எப்பொழுதாகிலும் மெருகேற்றி, மேற்கோள் காட்டியிருக்கிறார்களா என்று எந்த ஒரு மனிதனாவது எனக்கு சொல்ல முடியுமா என்று கேட்க விரும்புகிறேன். கிடையாது, கிடையாது, ஆனால் நீங்கள் அதன் மீது சார்ந்திருக்கிறீர்கள். மேலும் உங்களுடைய ஆசாரியனை "பிதா” என்று அழைக்கிறீர்கள். "ஒரு மனிதனையும் பிதா என்று அழைக்காதீர்கள் என்று இயேசு சொன்னார். 62. ஜனங்களாகிய நீங்கள், உங்களுடைய ஜெப புஸ்தகத்தை வெளியே எடுக்கிறீர்கள். பிராட்டஸ்டன்டஸ், கத்தோலிக்கர் இருவருமே. திரும்பவும், திரும்பவும், திரும்பவுமாக அதையே சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள். பிராட்டஸ்டன்டஸ், கத்தோலிக்கராகிய இருவரும். "அஞ்ஞானிகள் செய்கிறபடி வீணாக திரும்ப திரும்ப சொல்லுகிறதை பயன்படுத்தாதீர்கள், அதிகமாக பேசுவதினால் அது கேட்கப்படும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்”. நீங்கள் பார்த்தீர்களா-? 63. பானையானது கைப்பிடி கொண்ட பாத்திரத்தை கருப்பு என்று அழைக்க முடியாது. அது சரியே. மனிதனால் ஏற்படுத்தப்பட்ட ஒவ்வொன்றும் கண்டனம் செய்யப்படுவதற்கு அவையெல்லாமே அறிவை சார்ந்ததின் கீழாக இருக்கிறது. ஆகையால் தான் ஒரு எழுப்புதலானது பட்டினத்திற்குள்ளாக வரும் பொழுது, இந்த இருக்கைகள் காலியாக விடப்படுகிறது. ஆனால் தேவன் எழுப்புதலை எப்படியாகிலும் அனுப்புகிறார். பத்திரிக்கைகள் அதை தூக்கி எரிந்து போடும், மேலும் நியாயத்தீர்ப்பின் நாளிலே, நீங்கள் பதிலளிக்கும்படி அழைக்கப்படும் பொழுது, அது ஏற்கனவே இருந்ததைப் போன்று நீங்கள் குற்ற உணர்வுள்ளவர்களாக காணப்படுவீர்கள். 64. தேவனுடைய வரமானது சாலமோனுக்குள்ளாக எவ்விதமாக கிரியை செய்கிறதென்று பார்க்கும்படியாக, தென்தேசத்து ராஜஸ்திரீ, சேபாவின் ராஜஸ்திரீ ஒரு ஒட்டகத்தின் மீது அமர்ந்து உலத்தினுடைய கடைசி பகுதியிலிருந்து, மூன்று மாதமாக எல்லா வழிகளையும் கடந்து, சாலமோனை பார்க்கும்படியாக கடந்து வந்தாள் என்று இயேசு சொல்லவில்லையா-? "மெய்யாகவே நான் உங்களுக்கு சொல்லுகிறேன், சாலமோனிலும் பெரியவர் இங்கு இருக்கிறார்”. மேலும் இந்த இரவில் நான் சொல்லுகிறேன், சாலமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். அது கிறிஸ்து என்கிற நபர். பரிசுத்தாவிக்குள்ளாக இருந்துக் கொண்டு, இவைகளையெல்லாம் நிகழ்த்திக் கொண்டு, கிரியை செய்துக் கொண்டு, அன்றைக்கு எவ்விதமாக கிரியை செய்தாரோ, அவ்விதமாகவே ஒரு மனிதனுக்குள்ளாக இருந்துக் கொண்டு கிரியை செய்கிறார். 65. தேவன் அதை நீங்கள் வெற்றிடமாக்கத் தக்கதான ஒரு இடத்தை உங்களுக்குள் உருவாக்கியிருக்கிறார். இப்பொழுது, உங்களுடைய பழைய ஜீவியத்தை மெருகேற்ற முடியாது. உங்களுடைய பழைய ஜீவியத்தை நீங்கள் மிகைப்படுத்தி காண்பிக்க முடியாது. அவள் மரிக்கத்தான் வேண்டும், அப்பொழுது அவளுக்குள்ளாக ஒரு புதிய ஜீவியம் பிறக்கும். அவளுக்கு சில நகை ஒப்பனைகள் தேவைப்படாது அல்லது உங்களுக்கு உதட்டிற்கு நீங்கள் போடும் எதுவாயிருந்தாலும், அதைத்தான் ஸ்திரீகள் செய்கிறார்கள். பார்த்தீர்களா-? அவர்கள் சற்று பார்வையாக தெரியும்படியாக அவ்விதம் செய்கிறார்கள். தலை முடியை சுருளாக்கும் காரியம் அவளுக்கு தேவையில்லை. அவளுக்கு உதட்டு சாயம் தேவையில்லை. சபைக்கு மறுபிறப்பும், பரிசுத்த ஆவியின் நிரப்பப்படுதலுமே அவசியமாய் இருக்கிறது. அவளுடைய தலைமுடியை சுருளாக்கிக்கொள்வதும், உதட்டிற்கு சாயம் பூசுதலும், இன்னும் அவள் அதே பெண்மணி தான். அவள் இன்னும் அதே சந்தேகிக்கிறவள் தான். அவளுக்கு இன்னும் சந்தேகங்கள் இருக்கிறது. அவளுக்கு பயங்கள் இருக்கிறது. அவள் எல்லாவற்றையும் குழப்பிக் கொண்டு, சத்தியத்தை கேட்க விரும்புகிறதில்லை. ஏனென்றால் அவளுக்கு இருக்கின்ற காரியங்கள், அவளை அவ்விதம் செய்ய விடுகிறதில்லை. அது சரியே, நிச்சயமாக. தெருவில் செல்லும் அவப்பெயரையுடைய ஸ்திரீயிடம் நீங்கள் நடந்து சென்று, ஓ ஸ்திரீயே, நீ தவறாய் இருக்கிறாய் என்று சொல்லிப்பாருங்கள். உங்களுடைய சொந்த வேலையை பாருங்கள் என்று அவள் சொல்லுவாள். சில வணங்கா கழுத்துள்ள சபை விசுவாசிகள் அவளை விட ஏழு மடங்கு மோசமானவர்கள். "ஒரு மகத்தான எழுப்புதல் நடந்துக் கொண்டு இருக்கிறது. நீ அங்கு வரவேண்டும். கர்த்தராகிய இயேசு தம்மைத் தாமே ரூபகாரப்படுத்தி வியாதியஸ்தரை சுகப்படுத்துகிறார். ஆகையால் ஜனங்கள் பரிசுத்தாவியைப் பெற்றுக்கொள்ளுகிறார்கள்" என்று அவளிடம் சொல்லிப் பாருங்கள். "உங்களுக்கு என்ன சம்பவித்தது. உங்களுடைய வேலையைப் பாருங்கள். நான் ஒரு சபையைச் சேர்ந்தவள். நீங்கள் எவ்வளவு நல்லவராக இருக்கிறீரோ, நானும் அவ்வளவு நல்லவள் தான்" ஏன்-? அவளுக்கு அதிகமாக ஒன்றும் தெரியாது. 66. ஆனால் நீங்கள் ஒரு பண்புடைய ஸ்திரீயிடம், அதை செய்வது தவறு என்று பேசிச் சொல்லிப் பாருங்கள். "ஆமென், அது தவறு என்று நான் அறிகிறேன்" என்று அவள் சொல்லுவாள். தேவனுடைய ஆவியினாலே மறுபடியும் பிறந்த ஒரு மனிதனிடத்திலோ அல்லது ஒரு ஸ்திரீயினிடத்திலோ சென்று பரிசுத்த ஆவியினுடைய ஞானஸ்நானம் உங்களுடைய இருதயத்தை நிரப்பும்படியாக அது இங்கே இருக்கிறது என்று சொல்லிப்பாருங்கள். அவர்கள் அதற்கு "ஆமென்' என்று சத்தமிடுவார்கள். காரணம் அவர்கள் தேவனுடைய வார்த்தையின் மீது போஷிக்கப்பட்டும், ஜீவித்துக் கொண்டும் இருப்பதினாலேயே. நிச்சயமாக அவர்கள் அப்படி செய்வார்கள். 67. இப்பொழுது நீங்கள் பார்ப்பீர்களானால், உலகத்தில் அது எவ்விதமாக இருக்கிறதோ, அவ்விதமாக சபைக்குள்ளும் இருக்கிறது. அவர்கள் ஏதோ ஒன்றை கட்டும்படி முயற்சிக்கிறார்கள். தேவனுக்கு தம்முடைய இராஜ்ஜியத்தை கட்டுவதற்கு யாருடைய உதவியும் அவசியமில்லை. நீங்கள் வார்த்தையை பிரசங்கிக்கும்படியாக தேவன் விரும்புகிறார். அவர் கட்டிடத்தை கட்டுவார். அவரே கட்டிட நிபுணர், அதற்கான திட்டங்களை அவர் இங்கே வைத்திருக்கிறார். 68. சரி, அப்படியென்றால் மேற்கொண்டு நாம் என்ன செய்யப் போகிறோம்-? உலகத்தின் காரியங்களை எடுத்துப்போட்டு அந்த இடத்தை வெற்றிடமாக்கும்படியான ஒரு இடத்தை தேவன் செய்து இருக்கிறார். இயற்கையானது ஒரு ஆவியை உங்களுக்குள்ளாக வைத்து, உலகத்தின் காரியங்களை நீங்கள் நேசிக்கும்படியாக வைக்கிறது. மேலும் அதை செய்யும் போது அது தவறு என்று உங்களுக்கு தெரியும். நீங்கள் ஒரு சபை அங்கத்தினனாய் இருந்தாலும் நீங்கள் எவ்வளவு மதப்பற்றுள்ளவராக இருக்க முடியுமோ அவ்விதமாக நீங்கள் இருக்கமுடியும், மேலும் அது முழுவதும் பிசாசினால் நிறைக்கப்பட்டதாக இருக்கும். அது சரியே. 69. நீங்கள் தேவனுடைய வார்த்தையை சந்தேகிப்பீர்களானால், பிசாசு தான் அவ்விதமான சந்தேகத்தை கொடுக்கிறான். நிச்சயமாக அப்படியே. ஒவ்வொரு வார்த்தையும் உண்மையாய் இருக்கிறது. அது மரியாதையற்றதாக இருக்கலாம், ஆனால் இது அந்த நேரமாய் இருக்கிறது. சில சிறிய பெண் தன்மைக்கொண்ட பெண் பிரசங்கி, தன்னுடைய ரப்பர் கையணியை எடுத்து விட்டு, அது எழுதியிருக்கிற பிரகாரம் சுவிசேஷத்தை பிரசங்கித்து, அதையே நிராகரித்து முக்கியத்துவமற்ற சில போதகர்களின் பயிற்சி பள்ளியின் அனுபவங்களினால் அதை செய்ய முயற்ச்சிக்கிறார்கள். 70. ஒரு அடைகாக்கும் குருவியின் கோழிக் குஞ்சுக்காக நான் எப்பொழுதுமே வருத்தப்படுவதுண்டு. ஒரு அடைகாக்கும் கருவியின் மூலம் பிறக்கும் கோழிக் குஞ்சானது, தாய் கோழி இல்லாததும், அதனோடு கூட செல்ல முடியாததுமாயிருக்கிறது. ஒரு போதகர்களின் பயிற்சி பிரசங்கி சொல்லியவைகளை தவிர தேவனுடைய வார்த்தையை அதற்கு மேல் அறிந்திராத ஒரு போதகர்களின் பயிற்சி கூட பிரசங்கி கீச்சொலியிட்டு, கூட செல்வதற்கு ஒரு தாயில்லாத ஒரு காரியத்தை இந்த அடைகாக்கும் குருவி கோழிக் குஞ்சு என்னுடைய நினைவில் வைக்கிறது. 71. ஆனால் கிருபையினாலும், வல்லமையினாலும் நிறைந்த சிறகுகளின் கீழாக உண்மையாகவே நீங்கள் பிறந்திருப்பீர்களானால், அவர் சொல்லிய ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம் என்பதை ஒத்துக் கொள்ளுவீர்கள். இயற்கைக்கு மேம்பட்ட விதத்தில் தேவன் அசைவாடும் போது, சரியாக உங்களுடைய இருதயமானது அதைச் சார்ந்து பசியுள்ளதாக இருக்கும். 72. நீங்கள் அதிலிருந்து விலகி சிந்தனையின் மூலமாக உள்ளத்தின் செயல்பாட்டினால், அது ஒரு பிசாசு, ஒரு பெயல்சபூல் என்று சொல்ல மாட்டீர்கள். நான் அதை விசுவாசிக்க மாட்டேன். என்னுடைய சபை அதைப் போதிப்பதில்லை என்று சொல்லுவார்கள். ஆனால் நீங்களோ "தேவன் எப்பொழுதும் ஸ்தோத்தரிக்கப்படுவாராக" என்று சொல்வீர்கள். ஏனென்றால் நீங்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருக்கறீர்கள் . 73. நீங்கள் வெறுமையாக தங்கியிருக்க முடியாது. வெறுமை என்பது தனிமையாய் இருப்பது. இன்றைக்கு மனந்திரும்பினவர்களுடைய விஷயத்தில் காரியம் அவ்விதமாகவே இருக்கிறது. நீங்கள் மனந்திரும்பின உடனே நீங்கள் வெறுமையாய் சுற்றி வருவீர்கள். அந்த சூழ்நிலையில் நீங்கள் உங்கள் முழங்கால்களிலிருந்து, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தினால் நிரப்பப்படும்படியாக தேவனைத் தேடவேண்டும். பின்பு சார்ந்துக் கொள்ளும்படியான இடத்திற்கு வருகிறீர்கள். அவருடைய ஆசீர்வதிக்கப்பட்ட பிரசன்னம் உங்களோடு இருக்கிறது. 74. சிங்க கெபியிலே அந்த இரவு தானியேல் இருந்த வண்ணமாக, சத்துரு உங்களிடத்திற்கு கடந்து வரும் போது, தேவனுடைய வெளிச்சமானது பிரகாசிக்கிறது. அவன் உங்களைவிட்டு கடந்த போவான். வீட்டினுடைய நல்ல மனிதன் அதற்கு பாதுகாப்பு கொடுக்காவிட்டால், நிச்சயமாக. 75. இப்பொழுது, பெந்தேகோஸ்தே நாளில் அவர்கள் யாவரும் ஒருமனப்பட்டிருந்தார்கள் அல்லது அதற்கு சற்று முன்பாக, சீஷர்கள் யாவரும் சுத்திகரிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுடைய எல்லா பாவங்களும் மன்னிக்கப்பட்டிருந்தது. அந்த வயதான தாய் பறவையானது அது இருந்த விதமாகவே, இயேசு என்ற அந்த மேய்ப்பன், பிசாசினுடைய ஆவி புறம்பாக்கப் பட்டிருந்ததான அந்த சூழ்நிலையில், பரிசுத்த ஆவியினால் நிறைக்கப்படும்படியாக காத்திருந்ததான அந்த வேளையில், கோழி தன் முட்டைகளை கூட்டிச் சேர்த்து அவயம் காக்கும் நேரத்தில்....... அவர்கள் பன்னிரண்டு பேர், அவர்கள் எல்லார் மத்தியிலேயும் ஒருவன் மாத்திரம் பிசாசினால் அபிஷேகம் பண்ணப்பட்டிருந்தான். 76. அவன் இயேசு செய்ததான மிகுதியான காரியங்களை பார்த்த பிறகு, அவன் தான் சிப்பாய்களை கொண்டு அவருடைய தலையில் ஒரு கந்தை துணியை சுற்றி, ஒரு கடினமான தடி அல்லது ஒரு கம்பினால் அவருடைய தலை மீது அடித்து, உன்னை அடித்தது யார் என்று சொல், அப்பொழுது நாங்கள் உன்னை விசுவாசிப்போம் என்று சொல்ல வைத்து சிப்பாய்களை நடத்தினான். இயேசுவை பின்பற்றி, அவருடைய அற்புதங்களை பார்த்த, அந்த யூதன் திரும்பி வருகிறதை பார்த்து, இயேசு அவனிடத்தில் அவன் யாரென்றும், அவன் எங்கிருந்து வருகிறான் என்றும் சொன்னார். இவையெல்லாவற்றையும் அவன் பார்த்த பிறகும், இந்த மனிதனே அதை சந்தேகித்தான். சமாரியாவின் கிணற்றண்டையில் அந்த ஸ்திரீயோடு அவரைப் பார்த்து, அவளுடைய பாவங்களையெல்லாம் அவர் சொல்லிக் காட்டியதை கேட்ட பரிசேயர்கள் இவன் தற்செயலாக நடப்பதை சொல்லுபவன் என்று சொன்னார்கள். அதன் பின்பு அன்பான இயேசுவை பார்த்த பிறகு, அந்த ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தை தொட்ட பிறகு அவள் சுகமானதை அவர்கள் பார்த்த பிறகும், அவன் இன்னும் அவரை விசுவாசிக்கவில்லை. அவனுக்குள் அவிசுவாசமென்ற ஆவியை அவனுக்குள் வரும்படி செய்தார். ஏனென்றால் அவன் வெளிப்புறமாக கற்பிக்கப்பட்டிருந்தான். நான் எதை புரியவைக்க விரும்புகிறேன் என்று பார்த்தீர்களா-? ஓ, அவிசுவாசம் என்பது எவ்வளவு பயங்கரமான காரியமாயிருக்கிறது. மேலும் ஜனங்கள் கிறிஸ்தவம் என்பது அவிசுவாசத்துடன் சேர்ந்து தங்களுக்குள் இருக்கிறது என்று சொல்லிக் கொள்ளுகிறார்கள். அவர்கள் முரட்டுதனம் கொண்டவர்களும், தலைகனம் பிடித்தவர்களுமாகவும் கடைசி நாட்களில் அவ்விதமாக இருப்பார்களென்றும் வேதம் சொல்லுகிறது. நான் அதை குறித்து வித்தியாசமாக உணருகிறேனா-? இல்லை ஐயா, கடைசி நாட்களில் இருக்கிறோம் என்று நான் அறிந்துக் கொள்ளும்படி அது செய்கிறது. 77. ஆவியானவர் இரகசியங்களை பேசுகிறார் என்று வேதம் சொல்லுகிறது. (இரகசியங்கள் என்ற வார்த்தை எதை அர்த்தப்படுத்துகிறது என்று உங்களுக்கு தெரியும்) கடைசி நாட்களில் (அது இவ்விதமாக) கொடிய காலம் வரும். மனுஷர் உலக காரிங்களை நேசிப்பவர்களாய் இருப்பார்கள். 78. "நான் டாக்டர் ஜோன்ஸ், என்னுடைய குரு பயிற்சி அனுபவங்கள், நான் எல்லாவித பட்டங்களையும் பெற்றிருக்கிறேன். நான் ஒரு எல்.எல், இரண்டு எல்.டி, என்னுடைய மேய்ப்பர் இவை எல்லாமுமாக, அதுவாக” தேவனுக்கு இவைகளில் ஒன்றினாலும் எதையும் உங்களால் செய்ய முடியாது. 79. சில நாட்களுக்கு முன்பாக ஒரு மனிதர் எனக்கிருந்தார்."சகோதரன் பிரன்ஹாம் உங்களைச் சுற்றிலும் எல்லாவித பட்டங்களையும் என்னால் உருவாக்க முடியும்", மேலும் அவர் சொன்னார், "என்னுடைய டாக்டர் பட்டத்தை வாங்கின ஒவ்வொரு முறையும், நான் கிறிஸ்துவை கண்டுக்கொள்ள முடியும் என்று நினைத்தேன், என்னுடைய இலக்கிய பட்டத்தை வாங்கும் பொழுதும், என்னுடைய பல்கலைக்கழக பட்டத்தை வாங்கும் பொழுதும், நான் கிறிஸ்துவை இவைள் எல்லாவற்றின் மத்தியிலும் நான் வேட்டையாடிக் கொண்டிருந்தேன். இன்னும் நான் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை”. “என்னுடைய உபாத்தியாயர்கள் தவறாய் இருந்தார்களா” -? என்று கேட்டார். 80. "கிறிஸ்து இவ்விதமான இறையியல் பட்டங்களால் அறியப்படுகிறவரல்ல என்று நான் சொன்னேன். ஆனால் அவர் பெந்தேகோஸ்தே நாளில் வந்த பரிசுத்த ஆவி என்ற ஒரு நபரின் மூலமாக அறியப்படுகிறார்”. அந்த மனிதன் என்னுடைய சாப்பிடும் அறையில் மேஜைக்கு குறுக்காக விழுந்து பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டார். ஆமென். இந்த இரவில் அவர் தெய்வீக சுகத்தை பற்றி பிரசங்கித்துக் கொண்டிருக்கிறார். இந்த நாட்களில் ஒரு குறிப்பிடத்தக்க மனிதனாய் அவர் இருக்கிறார். 81. சபை என்ன செய்தது-? சரியாக துரிதமாக அவரை சபை அங்கத்தினர் பதவியிலிருந்து நீக்கிப்போட்டது. "என் நாமத்தினால் நீங்கள் ஜெப ஆலயங்களுக்கு புறம்பாக்கப்படுவீர்களானால் பாக்கியவான்களாய் இருப்பீர்கள்". அவர்கள் "அகந்தையுள்ளவர் களாயும், இருமாப்புள்ளவர்களாகவும் இருப்பார்களென்று வேதம் சொல்லுகிறது. எப்பொழுது-? கடைசி நாட்களில். தேவனை நேசிப்பதைக்காட்டிலும், தொலைக்காட்சிகளையும், சிற்றின்பங் களையும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும் இருப்பார்கள்."இப்பொழுது நான் உங்களுக்கு சொல்லுகிறேன், நீங்கள் அந்த கூட்டங்களுக்கு போகாதீர்கள். ஏனென்றால் அவைகளில் ஒன்றுமில்லை”. அவதூறு செய்கிறவர்கள், வேதம் அவ்விதமாக சொல்லுகிறது. "தேவ பக்தியின் வேஷத்தை தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாகவும் இருப்பார்கள்". எவ்விதமான வல்லமை அது-? 82. சீஷர்கள் கேட்டார்கள்...... (சிறிது நேரம்) யூதாஸ் அவரை காட்டிக் கொடுத்ததை பார்த்த பிறகு சீஷர்கள் இந்த கேள்வியைக் கேட்டார்கள். எல்லாமே காட்சிக்குள்ளாக இருந்தது. "கர்த்தாவே இந்த சமயத்திலா இஸ்ரவேலுக்கு உம்முடைய இராஜ்ஜியத்தை அளிக்கப்போகிறீர்" என்று அவரிடம் கேட்டார்கள்-? 83. அவர் என்ன சொன்னார் என்று கவனியுங்கள். "அந்த வேளையை அறிந்துக் கொள்வது உங்களுடைய காரியமல்ல, ஆனால் நீங்கள் எருசலேம் பட்டினம் வரைக்கும் செல்லுங்கள். நீங்கள் சாட்சியாய் இருப்பதற்கு முன்பாக உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படுவீர்கள்" ஒரு சாட்சியாக இருக்கக் கூடியவர் ஏதோ ஒன்றை அறிந்திருக்க வேண்டும். ஒரு சாட்சியாயிருக்கக்கூடிய ஒரு அனுபவத்திற்குள்ளாக கடந்து வரவேண்டும். நீங்கள் பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பண்ணப்படும்மட்டாக கிறிஸ்துவுக்கு சாட்சியாய் இருக்க உங்களால் முடியாது. 84. மூன்றரை வருடம் அவரோடு நடந்து செல்லும்படியாக சீஷர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தாலும், பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ளும் வரை, இயேசு சீஷர்களை பிரசங்கிக்க அனுமதிக்கவில்லை. அவர்கள் பரிசுத்தமான மனிதர்கள் தான், அவருடைய பார்வையிலே பிரிதியாய் காணக்கூடியவர்கள் தான். ஆனால் அவர்கள் அங்கே சென்று காத்திருந்து அவர்களுக்குள்ளாயிருந்த வித்தியாசமான காரியங்களை எடுத்துப்போட்டு, பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குள்ளாக வந்தார். அதுவரை அவர்களை பிரசங்கிக்க அனுமதிக்கவில்லை . 85. இன்றைக்கு உலகத்திற்கு தேவையாயிருப்பது அதே நிரப்பப்படுதல் தான். அடைக்கப்பட்டிருந்ததான காரியங்கள் வெளிவரும் போது தான் அதற்கு ஒரு நிரப்பப்படுதல் தேவையாயிருக்கிறது. அந்த நிரப்பப்படுதல் உள்ளே வரும் போது அது என்ன செய்கிறது-? உங்களுக்கு எங்கே சந்தேகம் வருகிறதோ, அங்கே வித்தியாசத்தை அது கொண்டு வருகிறது. உங்களுக்குள் எங்கே வித்தியாசங்கள் காணப்படுகிறதோ, அங்கே அது அன்பை கொண்டு வருகிறது. உங்களுக்குள் எங்கே விரோதங்கள் காணப்படுகிறதோ, அங்கே அது ஐக்கியத்தை கொண்டு வருகிறது. பின்பு ஜீவிக்கிற தேவனுடைய சபையானது, எப்பொழுதோ ஒரு நாள் ஒரு மகத்தான தலைமையின் கீழாக, ஐக்கியத்திற்குள்ளாக கொண்டு வரும். மேலும் அது தேவனுடைய தலைமையாயிருக்கும். தேவன் கிறிஸ்துவின் சரீரத்தை அரசாளுபவராகவும், இராஜாவாகவும், முழு சபையையும் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள்ளாக வைத்திருக்கும் கர்த்தாவாகவும் இருப்பார். பின்பு அவள் மேலே எடுத்துக்கொள்ளப்படுவாள். 86. இன்றைக்கு அவர்கள் எல்லாவிதமான பாபிலோனின் கோபுரங்களையும் கட்டிக்கொள்ளலாம், எல்லாவிதமான ராக்கெட்டு களையும் அவர்கள் கண்டுப் பிடிக்கலாம், எல்லா விதமான சோஷலிஸத்தையும், கம்யூனிஸத்தையும் அவர்கள் கிளரி விடலாம். எல்லாவிதமான போதகர்களின் அமைப்புகளும் தோல்வியடையும். ஆனால் இவையெல்லாவற்றின் மத்தியிலும், தேவன் தம்முடைய இராஜாவின் கீழாக சபையை ஐக்கியத்திற்குள்ளாக வைத்திருப்பார். அவருடைய இராஜாதிபத்தியத்தை பரிசுத்தாவியின் ஞானஸ்நானத் திற்கு உள்ளாக வைத்திருப்பார். 87. "விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும். என் நாமத்தினாலே அவர்கள் பிசாசுகளை துரத்துவார்கள்; நவமான பாஷைகளை பேசுவார்கள், அவர்கள் சர்ப்பங்களை எடுத்தாலும், சாவுக்கேதுவானவைகளை குடித்தாலும், அது அவர்களை சேதப்படுத்தாது. வியாதியஸ்தர் மீது கைகளை வைப்பார்கள், அவர்கள் சொஸ்தமாவார்கள்". மகத்தான அடையாளங்களும் அற்புதங்களும்....."நான் செய்கிற கிரியைகளை அவர்களும் செய்வார்கள், இவைகளிலும் மேலானவைளை செய்வார்கள். ஏனென்றால் நான் பிதாவினிடத்திற்கு போகிறேன். இன்னும் கொஞ்சம் காலத்தில் உலகம் என்னை காணாது; நான் உங்களோடிருப்பதினால், நீங்கள் என்னை காண்பீர்கள், என்ன-? அடைப்பிலிருந்து வெளி வருகிறது, வெற்றிடமாக்குகிறது. "பின்பு உலகத்தின் முடிவு பரியந்தம் நான் உங்களோடிருப்பேன்”. உலகத்தின் அழிவு வரை. நிச்சயமாக, "உலகத்தின் முடிவு பரியந்தம் நான் உங்களோடும், உங்களுக்குள்ளும் நான் இருப்பேன்". 88. அந்த ஆவியானது இங்கே இருந்துக் கொண்டு, தேவனுடைய நித்திய வார்த்தைளை பற்றிக்கொண்டு, எல்லாவற்றையும் வார்த்தைக்கு எதிரானது என்று அழைக்கிறது, அப்படி இல்லாதிருந்தும் கூட. என்ன நடந்தாலும் சரி, உலகம் என்ன பேசினாலும் சரி, மற்றவர்கள் என்ன பேசினாலும் சரி, அதை குறித்து கவலையில்லை... தேவன் ஒரு வாக்குதத்தத்தை கொடுத்திருந்து, அந்த ஆவியியை ஒரு மனிதன் அணிந்துக் கொண்டிருப்பானானால், அவன் அந்த தேவனுடைய வாக்குதத்தத்தை பற்றிக்கொள்ளுவான், ஏனென்றால் அவனுடைய பாதையில் எந்த தடைகளும் இல்லை 89. சபையானது குற்றமற்றதாய் இருக்கிறது. சபையானது பரிசுத்த ஆவியினால் தூய்மையாக இருக்கிறது. அவர்களுடைய மனசாட்சியானது சந்தேகப்படுதலிலிருந்து உணர்ச்சியற்று போகிறது, அவிசுவாசம் என்பது எடுபட்டுப்போகிறது. ஒரு குறிப்பிட்ட காரியத்தை குறித்து தேவனுடைய வார்த்தை சொல்லுகிறதை அவர்கள் கேட்கும் போது, அவர்கள் அதை விசுவாசிக்கிறார்கள். ஓ, அவர்கள் அதை பற்றிப்பிடித்துக் கொள்ளுகிறார்கள். அவர்கள் அந்த சூழ்நிலையில் இருந்து அசைந்து கொடுக்க மாட்டார்கள். 90. என்னுடைய நண்பர்களே, இன்றைக்கு உலகமானது ஜனங்கள் கிறிஸ்துவோடு ஐக்கியம் கொண்டவர்களாகவும், உண்மையான கிறிஸ்துவின் ஆவியோடு ஜனங்கள் அதை பார்க்கும்படியாக ஜனங்கள் வாஞ்சிக்கிறார்கள், தீரமான வீரர்கள். முடிக்கும் தருவாயில் நான் இவ்விதமாக சொல்லக் கூடும். உலகமானது வீரர்களை பார்க்க வாஞ்சிக்கிறது. அவர்கள் வீரர்களை கனம் பண்ணுகிறார்கள். அது நல்லது. கோழைகள் பத்து லட்சம் முறை மரிக்கிற நேரத்தில் வீரர்கள் மரிப்பதில்லை என்கிற பழமொழியைப் போல. 91. கதை ஒன்று என் நினைவுக்கு வருகிறது. சிறிது நேரத்திற்கு அதை நான் மேற்கோள்காட்ட விரும்புகிறேன். அதிக காலமாக மறக்கப்பட்ட ஒரு வீரனுடைய கதையது. என்னுடைய வயதில் இருக்கக்கூடிய அநேகமான ஆண்களும், ஸ்தரீகளும் நம்முடைய பள்ளி புஸ்தகங்களில் அது இருந்ததை ஞாபகம் வைத்திருப்பீர்கள். 92. ஸ்விஸர்லேன்டில் அநேக வருடங்களுக்கு முன்பாக அது இருந்தது. அந்த சிறிய ஸ்விஸர்லேன்ட் ஜனங்கள் மலைகளுக்கு மேலே சென்று தங்களுக்கென்று சில வீடுகளை கட்டிக்கொண்டார்கள். அவர்களுக்கு தங்களுடைய சொந்த சிறிய பொருளாதாரம் இருந்தது. அவர்களுடைய சொந்த வீடுகள், அவர்கள் அதை நேசித்தார்கள். அவர்கள் ஒரு போர் புரிகிற ஜனங்களாக இருக்கவில்லை. அவர்கள் சமாதானம் நிறைந்த ஜனங்களாய் இருந்தார்கள். 93. மேலும் திடீரென்று ஒரு சமயத்தில் மகத்தான வல்லமை நிறைந்த பட்டாளம் ஸ்விஸர்லேன்டுக்குள் வந்துக் கொண்டிருந்தது. அவர்கள் மிகவும் தேர்ச்சிப் பெற்றவர்களாயிருந்த மனிதர்களாய் இருந்தார்கள். ஒரு கல் சுவரைப் போல, அங்கே தங்களுடைய இருக்கைகளை பொருத்திக்கொண்டார்கள். பெரிய கவசம், பெரிய ஈட்டிகள், நல்ல தேர்ச்சி பெற்ற போர் வீரர்கள். ஸ்விஸர்லேன்ட் என்ன வைத்து இருக்கிறதோ அவையெல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளும்படியாக ஸ்விஸர்லேன்டுக்குள் நடந்து வந்துக் கொண்டிருந்தார்கள். அந்த ஸ்விஸர்லேன்ட் ஜனங்கள் தங்களுடைய வீடுகளை பாதுகாக்கும் படியாக தங்களுடைய பிள்ளைகள், தங்களுடைய குழந்தைகள், தங்களுடைய மனைவிகளை முத்தமிட்டு, பிரியா விடைபெற்றுக் கொண்டு தங்களுடைய பழைய அரிவாள் கத்திகளையும், பாறைகளையும், கற்களையும், பழைய மகத்தான பெரிய சங்கங்களிடமும் விடை பெற்றுக் கொண்டு வெளியே சென்று பள்ளதாக்குகளில் வந்துக் கொண்டிருந்ததான படை வீரர்களை சந்திக்கும்படியாக வந்தார்கள். 94. சிறிய சொற்ப எண்ணிக்கை உள்ளவர்களான மனிதர்கள். அவர்கள் அங்கே ஒன்று கூடினார்கள், ஆனால் அவர்களை சுற்றி வலம் வரும் போர் சேவகர்கள். அவர்களால் என்ன செய்ய முடியும்-? அவர்கள் அங்கு நம்பிக்கை இழந்தவர்களாக, உதவி இல்லாதவர்களாக, ஒருவர் மற்றவரைப் பார்த்து நின்றுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அங்கே ஒன்றுமில்லாமல் போனார்கள். அதை சுற்றிலும் எந்த வழியுமில்லை. அவர்கள் முடிந்து போனார்கள் என்ற நிலை. 95. சிறிது நேரத்திற்கு பிறகு, அர்னோல்ட் வோன் விங்கல் ரீட் என்ற பெயரையுடைய மனிதர் அங்கே இருந்தார். அவர் முன்பாக காலடி வைத்து, அவர் சொன்னார், ஸ்விஸர்லேன்ட் மனிதர்களே, மலைகளுக்கு அப்பால் ஒரு சிறிய வெள்ளை நிற வீட்டில், என்னுடைய மனைவியும், என்னுடைய பிள்ளைகளும் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். மேலும் அவன் சொன்னான் "மறுபடியுமாக அவர்களை இந்த பூமியில் பார்க்க முடியாமல் போகலாம் என்று சொல்லி, அவர்களை முத்தமிட்டு, பிரியா விடை பெற்றுக்கொண்டு வந்தேன். 96. "அர்னோல்ட் வோன் விங்கல் ரீட் நீ என்ன செய்யப் போகிறாய்”-? என்று அவர்கள் கேட்டார்கள். "இந்த நாளிலே ஸ்விஸர்லேன்டுக்காக நான் மரிப்பேன்” என்று அவன் சொன்னான். "நல்லது, அர்னோல்ட் வோன் விங்கல் ரீட், அது எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்யாது. ஸ்விஸர்லேன்டுக்காக மரிப்பேன் என்று நீ ஏன் சொல்லுகிறாய்-? "கலப்பையின் முன்பகுதி, சிறிய பழைய அரிவாள்கள், கொம்புகள், கனமான தடிகள், பாறைகள் என்று நீங்கள் என்ன வைத்டு இருக்கிறீர்களோ அவற்றை எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி, என்னை பின்பற்றி வாருங்கள், நீங்கள் என்ன வைத்திருக்கிறீர்களோ அவற்றை வைத்து சிறந்த முறையில் போரிடுங்கள்” என்று சொன்னான். “நீ என்ன செய்யப் போகிறாய்" என்று கேட்டார்கள். 97. மேலும் அவன் தன்னுடைய அரிவாளை கீழே எரிந்து (எதைக் கொண்டு சண்டையிட வேண்டுமோ அதை) தன்னுடைய கரங்களை மேலே உயர்த்தி, அந்த பெரிய படை வீரர்களை நோக்கி கூக்குரலிட்டான். அவன் சுற்றிலுமாக பார்த்தான். அந்த கனமான ஈட்டிகளை அவன் பார்த்தான், எல்லோருமே தங்களுடைய சீருடையில் எண்ணிக்கை நிறைந்தவர்களாய், மலையை நோக்கி படிப்படியாக நடந்துப் போய்க் கொண்டே இருந்தார்கள். ஓ, அந்த வழியில் தான் பிசாசு அதை செய்கிறான். சரியான முனைக்கு அவர்களை நடத்திச் சென்று... தன்னுடைய கரங்களை உயர்த்தி விடுதலைக்கு வழி செய்யுங்கள் என்று அவன் கூக்குரலிட்டான். பின் தொடர்ந்து வருகிற போர் வீரர்கள் என்ன நடக்கிறதென்று ஆச்சிரியப்பட்டார்கள். அவன் ஓட ஆரம்பித்து, விடுதலைக்கு வழி செய்யுங்கள் என்று கூக்குரல் இட்டான்”. 98. அவன் இந்த மகத்தான பெரிய ஈட்டிகள் அவனைப் பிடிப்பதற்காக குறி பார்த்து நீட்டியிருந்த நேரத்தில், அவன் இவ்விதமாக தன்னுடைய கரங்களால் அவைகளை பற்றி பிடித்து, அந்த ஈட்டிகளை தன்னுடைய கரங்களுக்குள் முழுமையாக சேர்த்து தன்னுடைய மடியின் கீழாக கொண்டு வந்தான். ஒரு உண்மையான வீரனுடைய பாகத்தை காண்பித்தான், அது அந்த போர் சேவகர்களை அவ்வளவாக பாதித்தது, அது அவர்களை நிலைகுலைய செய்தது. 99. இப்பொழுது ஸ்விஸர்லேன்ட் ஜனங்கள் தங்களுடைய கனமான கம்புகளோடும், தடிகளோடும் அந்த போர் வீரர்களை அடித்து, தங்களுடைய தேசத்திருந்து துரத்தி விட்டார்கள். அந்த சமயத்திலிருந்து இந்த சமயம் வரை அங்கே யுத்தமில்லாமல் இருக்கிறது. ஏனென்றால் ஒரு மனிதன் வீரனுடைய பாகத்தை ஏற்று, எது சரியென்று காணப்பட்டதோ அதை நிகழ்த்திக் காண்பித்தான். அது எப்பொழுதுமே மிஞ்சப்படவில்லை. மேலும் பெரும் செயல் வீரம் என்ற காரியத்தோடு மிக அபூர்வமாக அது ஒப்பிடப்பட்டது. ஆனால் ஓ, அது ஒரு சிறிய காரியம். 100. இந்தநாள் வரையும் அநேக வருடங்களுக்கு முன்பாக ஆதாமுடைய பிள்ளைகள், இந்த உலகத்தின் வம்சா வழிகளுக்கு நோய்களும், வியாதிகளும், பாவங்களும் பக்க துணையாய் வந்த போது, அவர்களிடத்தில் தீர்க்கதரிசிகள் அனுப்பப்பட்டு, அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். மேலும் எல்லாவிதமான சட்ட காரியங்கள் இருந்த போதிலும் அவைகளை நிராகரித்துப் போட்டார்கள். ஆதாமுடைய வம்சம் ஒரு மூலையில் பாவத்திற்கு பக்க துணையாயிருந்தார்கள். 101. பரலோகத்திலிருந்து ஒருவர் முன்னோக்கி காலடி எடுத்து வைத்து, “என்னுடைய ஜீவனை கொடுக்கும்படி இந்த நாளிலே பூமிக்கு இறங்கப் போகிறேன்”. அடர்த்தியான ஏவுகணை எங்கிருக்கிறது என்பதை கண்டுக் கொண்டார். ஆதாமுடைய வம்சத்தின் பயம் மரணமாக இருந்தது. அவர் கல்வாரிக்கு சென்ற போது, மரணத்தை பற்றி பிடித்துக் கொண்டு தன்னுடைய மடிக்குள்ளாக இழுத்துக் கொண்டார். அவருடைய சீஷர்களிடத்தில், இப்பொழுது உங்களை வெறுமை ஆக்குங்கள். நீங்கள் மேலே சென்று, அங்கே காத்திருந்தால் நீங்கள் போர்ச் செய்யும்படியான ஒன்றை அனுப்பித்தருவேன்”. 102. ஆசீர்வதிக்கப்படுவதாக...... என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். கர்த்தருடைய நாமம் ஆசீர்வதிக்கப்படுவதாக. அவர் தம்முடைய பரிசுத்த ஆவியை அனுப்பி “என்னை பின்பற்றுங்கள், வியாதியையும், பாவத்தையும் முடிவு மட்டாக வெட்டி எரியுங்கள்” ஆண்களே, ஸ்திரீகளே ஒரு மகத்தான காரியம் சபைக்குக் கொடுக்கப்பட்டு இருக்கிறதென்றால், அது சில போதகர்களை சார்ந்த காகிதங்களை உங்களுடைய கரங்களில் பிடித்திருப்பதல்ல, ஆனால் தேவனுடைய பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, நம்முடைய முதன்மை தளபதி வந்து தமக்கு சொந்தமாக்கிக் கொள்ளுமட்டாக, பிசாசினுடைய இராஜ்ஜியத்தை வெட்டி எரிய வேண்டும். 103. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. எனக்கு நானே அருகாமையிலிருக்கிறேன் என்று நினைத்து விடாதீர்கள். அது உண்மை. நான் என்ன பேசுகிறேன் என்று எனக்கு தெரியும். மரியாதைமிக்க ஆண்களே, ஸ்திரீகளே, தேவனை விசுவாசிப் பவர்களே, தேவனுடைய ஆவியை உங்களுக்குள்ளாக பெற்று இருக்கிறீர்கள் என்று உரிமை பாராட்டுகிறவர்களே, நீங்கள் வியாதியாயும், தேவையுள்ளவர்களாயும் இருப்பீர்களானால், அந்த வியாதியை தோற்கடிக்கும்படியான ஆயுதத்தை நீங்கள் வைத்திருக்கிறீர்கள். அது உங்களுக்குள் இருக்கிறது. தேவன் அதை உங்களுக்கு கொடுத்திருக்கிறார். 104. நாம் ஏன் ஒரு கோழையை போல இருக்க வேண்டும்-? நாம் ஏன் பக்க வரிசைகளில் நிற்க வேண்டும்-? நாம் நம்முடைய தளபதியை பின் பற்றுவோம். கல்வாரிக்கு சென்ற அவரை நாம் பின்பற்றுவோம். அவர் கல்வாரிக்கு சென்ற போது நம்முடைய மீறுதல்களினிமித்தமாக அவர் காயப்பட்டார். அவருடைய தழும்புகளால் குணமானோம். 105. அவர் உங்களுக்கு என்ன கொடுத்திருக்கிறாரோ, அதை வைத்து வியாதியையும், பாவத்தையும் சண்டையிட்டு ஜெயித்திடுங்கள். அவிசுவாசத்தை சண்டையிட்டு உங்களை விட்டு அப்புறப் படுத்திடுங்கள். அவன், ஒரு பொய் சொல்லுகிறவன் என்று பிசாசிடம் சொல்லுங்கள். கிறிஸ்து சொன்னார், நான் உலகத்தை ஜெயித்தேன். உலகத்திலிருக்கிறவனை காட்டிலும் உங்களில் இருப்பவர் பெரியவர். இந்த இரவிலே உங்கள் சரீரத்திலிருக்கும் வியாதியைக் காட்டிலும், கிறிஸ்துவினுடைய வல்லமை மகா பெரியதாயிருக்கிறது. நீங்கள் மேற்கொள்ள முடியாத பாவத்தை கண்டு குழப்பமடைகிறீர்கள், கிறிஸ்துவினுடைய வல்லமை மகா பெரியதாயிருக்கிறது. நாம் அந்த பரிசுத்த ஆவியை எடுத்துக்கொண்டு, பிசாசை சண்டையிட்டு கீழே தள்ளி ஒரு சிலுவையின் வீரர்களைபோல வெற்றியடைந்தவர்களாய் முன் நடப்போம். நாம் ஜெபம் செய்வோம். 106. யேகோவா, யேகோவா ரஃப்பா, யேகோவாயீரே, இயேசுவின் நாமத்தில் நாங்கள் வருகிறோம். நாங்கள் ஏன் வந்திருக்கிறோம் என்றால், "என் நாமத்தினாலே நீங்கள் பிதாவினிடத்தில் எதை கேட்கிறீர்களோ, அதை நான் உங்களுக்கு தருவேன்” என்று சொன்னீரே. இந்த இரவிலே ஒரு சிறு கூட்டமான ஜனங்கள் இங்கிருக்கிறார்கள். அவர்கள் அந்த கொடியின் கீழாக இருப்பதற்கு எவ்வளவாக தள்ளாடுகிறார்கள். பிசாசு அவர்களை பார்த்து பாம்பைப்போல சீறி ஒலிக்கொடுக்கிறான். அவர்களை சுற்றி பெரிய மதில்களாய் இருக்கிறதான அந்த போர் சேவகர்களை பார்க்கிறார்கள். அற்புதங்களின் நாட்கள் கடந்து போய் விட்டது. அப்படிப் பட்டதான காரியம் எதுவுமில்லை என்கிறார்கள். 107. ஒ, தேவனாகிய கர்த்தாவே, அவர்களுடைய இருதயங்களை நிரப்பின பரிசுத்த ஆவியாகிய அந்த நித்திய ஜீவனை அவர்கள் பற்றிப்பிடித்துக் கொள்ளட்டும். ஒரு வேளை அவர் அவர்களை நிரப்பாமலிருந்தால், இப்பொழுதே அதை அவர் செய்யட்டும். எல்லாவிதமான சந்தேகங்களும் மறைந்து போகட்டும். இந்த இரவிலே இந்த சிறிய சரீரமாகிய ஜனங்கள் தேவனுடைய வல்லமையான நிரப்பப்படுதலினால் நிரப்பப்படும் படியாகவும், எல்லாவிதமான அவிசுவாசத்தையும், சந்தேகங்களையும் எடுத்துப் போட்டு, விசுவாசத்தையும், அன்பையும், சந்தோஷத்தையும், மகிழ்சியையும், பரிசுத்த ஆவியையும் தந்து, பழைய ஏற்பாட்டின் ஆபிரகாமைப்போல, இல்லாதவைகளை இருக்கிறதென்று அழைத்த விதமாக, தேவன் அவர்களுக்கு கொடுத்த வாக்குதத்தத்தை பிடித்துக்கொள்ளட்டும். ஏனென்றால் தேவன் அவ்விதமாக சொல்லியிருக்கிறார். அதை அளித்தருளும் கர்த்தாவே. 108. இந்த கட்டிடத்திற்குள் எல்லா இடங்களிலும் தலைகளை தாழ்த்தி இருக்கிற வேளையில், நான் ஆச்சரியப்படுகிறேன், ஒரு வேளை யாராவது ஒருவர் இந்த இரவிலே பரிசுத்த ஆவியைப் பெறாமலிருந்தால், இவ்விதமாக சொல்லட்டும். "ஓ, கர்த்தாவே என் மீது இரக்கமாயிரும். நான் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட போதகர்களுடைய அமைப்புகளின் கோபுரத்தை சுற்றி சார்ந்திருப்பதற்காக வெட்கப்படுகிறேன். இவற்றோடு தங்களுடைய சந்தேகங்களையும், காரியங்களையும் இதனோடு உற்பத்தி செய்கிறார்கள். இந்த உலகத்தின் இராஜ்ஜியத்தின் கீழாக இருந்து என்னை வெளியே எடுத்து, பரிசுத்த ஆவியின் மூலமாக உம்முடைய இராஜ்ஜியத்தின் கீழாக என்னை பொருத்தும். இப்பொழுது அது எனக்கு தேவையாயிருக்கிறது கர்த்தாவே. என்னுடைய சுகத்தை விசுவாசிக்கும்படியான நம்பிக்கையை எனக்கு தாரும். என்னுடைய பாவங்களும் இன்னும் மற்ற காரியங்களும் போய் விட்டன என்று விசுவாசிக்கத்தக்கதான நம்பிக்கையை எனக்குத்தாரும். பரிசுத்த ஆவியானவர் எனக்குள்ளாக வந்து, என்னுடைய ஆத்துமா மகிழ்ச்சியினால் நிரம்பி வழியத் தக்கதாக விசுவாசிக்கும்படியான நம்பிக்கையை எனக்கு தாரும்”. 109. நீங்கள் உங்கள் கரங்களை உயர்த்தி "அதை நான் பெற்றக்கொள்ள விரும்புகிறேன்" என்று சொல்லுவீர்களா-? கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஸ்திரீயே. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, உங்களை, உங்களை, உங்களை கட்டிடத்தில் எல்லோரும்..... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஸ்திரீயே. நான் காத்துக் கொண்டு இருக்கிறேன், தேவன் கவனித்துக் கொண்டிருக்கிறார். மேலும் இந்த பகுதியில், இங்கு இந்த வரிசையில் எல்லோரும், ஆம், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 110. "எனக்கு பரிசுத்த ஆவி வேண்டும், நான் பாதி வழி ஜீவியத்தில் சுற்றி வந்து மிகவும் களைப்புற்றவனாய் இருக்கிறேன். வித்தியாசமான மனப்பாங்கு, அற்பமான காரியத்திற்கு அமளி செய்வது, வேகுதல், சந்தேகங்கள், பயங்கள் இவையாவும் என்னுடைய இருதயத்தில் இருக்கிறது. சகோதரன் பிரன்ஹாமே, இவை எல்லாமே என்னிடத்திலிருந்து வெளியே போக வேண்டும். எரிந்து பிரகாசிக்கிற விளக்காக இருக்கும்படியான ஒரு இடமாக நான் இருக்க விரும்புகிறேன். நான் இவ்விதமாக இருக்க என்னுடைய ஜீவியம் ஸ்தேவானைப்போல இருக்கவேண்டும்". அவன் எப்படியாக பயம் அற்றவனாய் இருந்தான். அவனுடைய முகம் தேவ தூதனைப்போல பிரகாசித்தது என்று சொன்னார்கள். அது ஒரு கண் கூசும் விளக்காக இருக்கவேண்டியதில்லை. ஒரு தூதன் என்பவன் கடுமையானவ னாகவும், தான் என்ன பேசுகிறோம் என்பதை அறிந்தவனாகவும் இருக்கிறான். 111. அவன் அந்த சனகரிப் சங்கத்திற்கு முன்பாக நின்று "வணங்கா கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும், செவிகளிலும் விருத்தசேதனம் இல்லாதவர்களே. நீங்களும் உங்கள் பிதாக்களைப்போல எப்பொழுதும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாக நிற்கிறீர்கள். நீங்கள் அவ்விதமாகவே செய்கிறீர்கள்”. அவன் ஒரு தூதனாய் இருந்தான். அவனிடத்தில் ஒரு செய்தி இருந்தது. "தூதன்” என்ற வார்த்தைக்கு “செய்தியாளன்” என்று அர்த்தம். எனக்கு ஒன்றைத்தாருங்கள்... என்னை ஒரு செய்தியான் ஆக்கும் கர்த்தாவே. என்னுடைய இருதயத்திற்குள்ளாக இருக்கும் பரிசுத்த ஆவியின் மூலமாக, கிறிஸ்துவின் தெய்வீக வல்லமையினால் அவ்விதம் செய்யும்". 112. உங்களுடைய கரங்களை உயர்த்துவீர்களா-? கரங்களை உயர்த்தாத வேறு யாராவது-? ஐயா, அந்த ஆசீர்வாதங்கள் உங்கள் மீது இருக்கிறது. ஆசீர்வாதங்கள் உங்கள் மீது இருக்கிறது. வாலிப ஸ்திரீயே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. வாலிப மனிதனே கர்த்தர் உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார். 113. நல்லது, சரி, நம்முடைய தலைகளை தாழ்த்தியிருக்கிற வேளையில், நீங்கள் சரியாக எங்கே இருக்கிறீர்களோ அங்கே தானே தேவன் உங்களை பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும்படியாக நாம் ஜெபிப்போம். "சகோதரன் பிரன்ஹாமே நான் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ளும்படியாக நீங்கள் கீழே இறங்கி வந்து உங்களுடைய கரங்களை வைக்கப்போகிறீரா-? நான் அவ்விதம் செய்ய வேண்டிய அவசியமில்லை. 114. கொர்நேலியுவின் வீட்டில் பேதுரு இந்த வார்த்தைகளை பேசிக் கொண்டிருந்தபோது, அவனுடைய வார்த்தையை கேட்டுக் கொண்டு இருந்தவர்கள் மீது பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். விசுவாசம் கேட்பதினாலே வரும், கைகளை வைப்பதினாலல்ல. ஆனால் கேட்பதினாலே, எதை கேட்பதினாலே-? தேவனுடைய வார்த்தைகளை கேட்பதினாலே. 115. கட்டப்பட்டிருக்கிறதான கோபுரங்கள், பாபிலோனின் கோபுரங்கள் இடிந்து கீழே விழும் என்பதை என்னுடைய தாழ்மையான வழியில் உங்களுக்கு காண்பிக்க முயற்சித்திருக்கிறேன். மேலும், நான் உங்களுக்கு ஒரு கோபுரத்தை சுட்டி காண்பித்துக் கொண்டிருக்கிறேன். மேல் நோக்கி செல்லும்படியான ஒரே ஒரு பாதை இருக்கிறது, அது பரிசுத்த ஆவியின் மூலமாக. 116. நீங்கள் நடுநிலை வகிக்க முடியாது. பரிசுத்த ஆவியினாலே முத்திரிக்கப்படாத யாவரும் மிருகத்தின் முத்திரையை தரித்துக் கொள்வார்களென்று வேதம் சொல்லுகிறது. மிருகத்தின் முத்திரை என்பது என்ன-? அவிசுவாசம். உங்களுக்கு தெரியாதா உங்களுடையது என்னவென்று........ 117. பழைய ஏற்பாட்டில் எக்காளமானது முழங்கும் போது, விடுதலைப் பெற்றுப்போக விரும்பினால், அவன் விடுதலைப் பெற்றுப் போகலாம். அப்படி அவன் விரும்பவில்லை என்றால், அவன் கதவின் பக்கம் நிற்க வைக்கப்பட்டு, காது கதவில் படிந்த வண்ணமாக வைத்து ஒரு துளையிடும் கருவியின் மூலமாக காதில் குத்த வேண்டும். ஏனென்றால் அவன் விடுதலைப் பெற்றுப் போக விரும்பவில்லை. நீங்கள் விடுதலைப் பெற்றுப்போக விரும்பவில்லை என்றால் நீங்கள் அந்த கடினமாக வேலை வாங்கும் அதிகாரிக்கு மிஞ்சி இருக்கும் ஆயுசுநாட்களில், அவருக்கு நீங்கள் ஊழியம் செய்ய வேண்டும். நீங்கள் இழக்கப்பட்டுப் போனீர்கள். 118. "சகோ.பிரன்ஹாமே, தேவனுடைய முத்திரை என்றால் என்ன-? பரிசுத்த ஆவியானவர். "அது வேத வாக்கியத்தின் படியாகவா-? என்று நீங்கள் கேட்கலாம், சரியாக அப்படித்தான். (அவைகள் அநேகமாய் இருக்கிறது) நான் உங்களுக்கு ஒரு ஆதாரத்தை காண்பிக்கட்டும், அப்பொழுது நீங்கள் அதை மறக்க முடியாது. எபேசியர் 4:30 சொல்லுகிறது, “மீட்கப்படும் நாளுக்கென்று நீங்கள் முத்திரையாக பெற்ற பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தாதிருங்கள்”. அங்கே தான் தேவனுடைய முத்திரை இருக்கிறது. அதைத்தான் நான் உங்களுக்கு சொல்ல முயற்சிக்கிறேன். கடைசி நாட்களில் தேவனுடைய முத்திரையானது வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள், அது உங்களுடைய நெற்றிகளிலல்ல. உங்களுடைய நெற்றிகளில் என்று சொல்லப்பட்ட நோக்கம், அங்கே தான் உங்களுடைய அறிவுத் திறன் இருக்கிறது. அதன் மூலமாக நீங்கள் புரிந்துக்கொள்ளும்படி. ஆனால் தேவனுடைய முத்திரை என்பது பரிசுத்தாவியின் ஞானஸ்நானம் என்று வேதம் சொல்லுகிறது. யாரெல்லாம் அதைப் பெற்றிருக்கிறார்களோ, அவர்களுடைய இருதயமெல்லாம் விடுதலைப் பெற்றிருக்கிறது. அவர்கள் தேவனுடைய அறிவாற்றலின் மூலமாக அவர்களுடைய நெற்றிகளில் முத்திரையிடப்பட்டிருக்கிறார்கள். அதன் மூலம் இயேசு மரித்து மீண்டும் உயிரோடெழுந்தார் என்பதை அறிந்துக்கொள்ள முடிகிறது. ஏனென்றால் அவர்கள் அவரைப் பார்க்க முடியும். 119. "நான் என் பிதாவினிடத்திற்கு போகிறபடியால், இன்னும் கொஞ்சம் காலத்தில் அவிசுவாசிகள் என்னை காணமுடியாது, ஆனால் நீங்கள் என்னை காண்பீர்கள். (முத்திரையைப் பெற்றவர்கள்) ஏனென்றால் உலக முடிவு பரியந்தம் நான் உங்களோடும், உங்களுக்குள்ளும் இருப்பேன். நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள், இதைக் காட்டிலும் மகத்தானவைகளை செய்வீர்கள்”. அவிசுவாசிக்கும் உலகமானது சில பாபேல் கோபுரத்தை சுற்றி முழுமையான இருளுக்குள்ளாக நடந்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தொடுதல் அல்லது அவர்களை சுற்றிலும் வேறு ஏதோ ஒன்று மூட நம்பிக்கை, சில மதகோட்பாடு, இவைகளின் மத்தியில் ஒரு உண்மையான விசுவாசியின் மூலம் அற்புத அடையாளங்கள் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறதான வேளையில்...... ஒரு அவிசுவாசியின் கண்களுக்கு அது மறைக்கப்பட்டிருக்கிறது. உங்களுடைய இருதயங் களை திறந்துக் கொடுத்து அவரை உள்ளே வரவிடுங்கள். 120. இந்த நேரத்தில் இந்த கட்டிடத்திற்குள்ளாக இருக்கும் ஊழியர்களையும் விசேஷமாக ஜெபிக்கும்படியாக கேட்டுக் கொள்ளப் போகிறேன். இது ஒரு மகத்தான தருணம், இந்த தருணம் நாம் சேருமிடத்தை முத்திரையிடும். சந்தேகமேயில்லை, அநேகரின் மத்தியில், ஆயிரம் வருடங்களைக் காட்டிலும், ஒரு ஆத்துமாவின் விலை மிகவும் விலையுயர்ந்தது. இந்த தருணம் எவ்வளவு மகத்தானது. 121. கர்த்தாவே, தேவனே, யேகோவாவே, ஆசீர்வதிக்கப்பட்டவரே, வானத்தையும் பூமியையும் உண்டாக்கியவரே, கர்த்தராகிய இயேசுவின் இரக்கங்களினால், கீழே இறங்கி இங்கே பசியுள்ளவர் களாயிருக்கிற ஒவ்வொருவருடைய இருதயத்திலும் உம்முடைய ஆவியினாலே பரிசுத்த எண்ணையை ஊற்றிடும். 122. "பேதுரு பேசிக்கொண்டிருந்த போது, பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மீது இறங்கினார்" என்று வேதத்தில் எழுதியிருக்கிறது. ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை . அவர்கள் ஒவ்வொருவரும் தாகமாய் இருந்தார்கள். "நீதியினிமித்தம் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் பரிசுத்தாவியினால் நிரப்பப்படுவார்கள்”. மனிதனால் ஏற்படுத்தப்பட்ட எண்ணங்களினால் திருப்தியாய் இருப்பவர்களிடம், தாங்கள் நிற்பாக்கியமுள்ளவர்களும், பரிதபிக்கப் பட்ட நிலையிலிருபபவர்களும், குருடர்களும், தரித்திரருமாயிருப்பதை அறியாமலிருப்பவர்களிடத்தில், அவர் மீது தாகமாயிராத ஜனங்கள் இடத்தில், கிறிஸ்துவைப்பற்றி நாம் எப்படி பேசமுடியும். 123. தேவனே, இன்றிரவு, தங்களுடைய கரங்களை உயர்த்திக் கொண்டிருப்பவர்கள், பரிசுத்த ஆவியானவர் தங்களுக்குள்ளாக வரவேண்டுமென்று வாஞ்சிப்பவர்கள் மீது இரக்கமாயிரும். ஒவ்வொரு இருதயத்தையும் அளவு கடந்த மகிழ்ச்சியினாலே நிரப்பி, அவர் ஜீவிக்கிறார் என்று கண்டுக் கொள்ளும்படியாக, அவருடைய ஆசீர்வாதத்தின் ஊற்றாக அவர் கீழே கடந்து வரட்டும். 124. உம்மை எவ்விதமாக ஏற்றுக்கொள்வது என்ற புரிந்து கொள்ளுதலை அவர்களுக்கு தாரும். உம்மை பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதைக் காட்டிலும், அவர்களுடைய இருதயத்திற்குள் நீர் வர எவ்வளவு ஆவலுள்ளவராயிருக்கிறீர் என்பதை புரிந்துக் கொள்ளும்படியான புரிந்துக்கொள்ளுதலை தாரும். அவர்களுக்கு உள்ளாக இருக்கின்ற ஒவ்வொரு வேடிக்கையான உணர்வுகளையும், அவர்களை சுற்றியிருக்கும் ஒவ்வொரு பிசாசின் சீற்றொலியும் "இப்பொழுது அதைப் பெற்றுக்கொள்ள மாட்டாய், நீ அதை பெற்றுக் கொள்ள மாட்டாய்" என்ற காரியங்கள். அவர்கள் அந்த பிசாசை பொய்யன் அழைக்கட்டும். தேவன் வாக்குதத்தங்களை கொடுத்தார். தேவன் அவருடைய வாக்குதத்தங்களை காத்துக் கொள்வார். ஆனால் நம்மால் எப்படி முடியும். ஒரு ஆமை அதனுடைய ஓட்டுக்குள் தன்னை இழுத்துக்கொள்ளுகிற வண்ணமாக, நாம் எல்லோருமே ஒன்றிற்கு உள்ளாக இழுக்கப்பட்டிருக்கும்போது.... 125. தேவனே, கூட்டமாயிருக்கிற இந்த ஜனங்களை அவர்களுடைய கட்டுகளிலிருந்து அவர்களை கட்டவிழ்த்து, உன்னதத்திலிருந்து பரிசுத்த ஆவியை மகத்தான வல்லமையோடும் முழக்கத்தோடும் கீழே அவர்கள் மீது அனுப்பும். அவர்களுடைய இருதயமானது இப்பொழுது திறக்கப்படட்டும். அவர்கள் பரிசுத்த ஆவியை மாத்திரமே பெற்றுக் கொள்வார்களானால், தேவனுடைய ஆசீர்வாதங்களெல்லாம் அவர்களுக்கு சொந்தமானதென்று அவர்களிடம் அறிவிக்கட்டும். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் பிதாவே அதை அவர்களுக்கு தந்தருளும். ஆமென். 126. நீங்கள் அவரை நேசிக்கிறீர்கள் இல்லையா-? இது தான் சத்தியம் என்று விசுவாசிக்கிறீர்களா-? ஒரு போதக பிரசங்கியை காட்டிலும் நான் அதிகமானவன் அல்ல, நான்... ஆனால் நான் என்ன...... என்னுடைய இருதயத்தில் நான் பார்க்கிறவைகளை மாத்திரம் நான் விளக்கி சொல்ல முடியும், நான் கடைசி காலத்தை பார்க்கிறேன். செய்தியானது உண்மை என்று நான் அறிவேன். இந்த மணி நேரத்தில் நான் மரித்துக் கொண்டிருந்தாலும், செய்தியானது உண்மையாய் இருக்கிறது. பாருங்கள்-? ஜனங்களுடைய கண்களானது அநேக நேரங்களில் குருடாக்கப்படுகிறதென்று நான் விசுவாசிக்கிறேன். ஆனால் ஒவ்வொரு காலத்திலும் தேவன் நீதியுள்ளவராய் இருக்கிறார். 127. அவர் நோவாவை அனுப்பினார். எத்தனைப் பேர் இரட்சிக்கப் பட்டார்கள்-? லோத்தின் நாட்களில் எத்தனைப் பேர் இரட்சிக்கப் பட்டார்கள்-? "மனுஷக்குமாரனுடைய வருகையிலும் அவ்விதமாகவே இருக்கும்” என்று இயேசு சொன்னார். நிச்சயமாக, (பார்த்தீர்களா-?) கொஞ்சம் பேர் மாத்திரமே, ஆனால் செய்தியானது எப்பொழுதும் போல சென்றுக் கொண்டேயிருந்தது. 128. இப்பொழுது கவனியுங்கள், தேவன் இங்கே இருக்கிறார் என்று எத்தனைப்பேர் விசுவாசிக்கிறீர்கள், உங்களுடைய கரத்தை நான் பார்க்கட்டும். அவர் யேகோவா-ரஃப்பா, தேவனுடைய நிபந்தனை-களுக்கு உட்பட்ட பலி என்று எத்தனைப்பேர் விசுவாசிக்கிறீர்கள்-? அவர் யேகோவா-யீரே, உங்களை சுகப்படுத்துகிற கர்த்தர் என்று எத்தனைப்பேர் விசுவாசிக்கிறீர்கள். நண்பர்களே கவனியுங்கள், அநேக முறை அமெரிக்காவில் என்னுடைய ஊழியமானது மிகவும் வலிமையுடையதாக இருந்ததில்லை. ஏனென்றால் ஜனங்கள் மிகவும் குழப்பத்திற்குள்ளாக இருப்பதினால். உட்கார்ந்து வேதத்தை எடுத்து, நீங்களாகவே படிப்பதை விட்டுவிட்டு, ஒருவர் ஒரு காரியத்தை போதிக்கிறதையும், வேறொருவர் இன்னொரு காரியத்தை போதிக்கிறதையும் கேட்டு பரிசுத்த ஆவியின் மூலமாக தங்களை திருப்திபடுத்திக் கொள்ளுகிறார்கள். (பார்த்தீர்களா-?) 129. இப்பொழுது பாருங்கள், அது உங்களுக்கு அவசியமில்லை ..... ஊழியர்கள் உங்கள் மீது கரங்களை வைக்கும்படியாக போதிக்கப் பட்டிருக்கிறீர்கள். அது பரவாயில்லை, என்னுடைய ஊழியமானது இயேசு கிறிஸ்து மரித்தோரின் மத்தியிலிருந்து உயிரோடெழுந்தார் என்பதற்கு அத்தாட்சியாய் இருப்பதை சாட்சி கொடுப்பதேயாகும். உங்களில் சிலர் அதை சிந்தையின் மூலம் உள்ளத்தை செயல்படுத்துவது என்று நினைத்தீர்கள். இன்று எனக்கு கடிதமெழுதி அவ்விதம் சொல்லியிருந்தீர்கள். 130. கடந்த இரவு ஜெப அட்டைகளை உடைய ஜனங்களை அழைத்து, பிறகு அவர்களை அனுப்பிவிட்டேன். ஜெப அட்டை இல்லாதவர்களை அழைத்தேன். கிறிஸ்துவினுடைய ஊழியன் என்ற முறையில் நான் இதை சொல்லட்டும், நண்பர்களே..... ஜீனும், லியோவும் இங்கிருக்கி றார்கள். என்னுடைய ஆத்தும நண்பர்கள். டாக்டர். வேய்ல், என்னுடைய மகன் பில்லி, அங்கே சகோதரன் சாத்மென், கனடாவிலிருக்கும் மேனேஜர், சகோதரன் நார்மன், இந்தக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருப்பவர். அநேக மனிதர்கள்............... என்னுடைய பட்டினத்தை அழைப்பியுங்கள், பட்டினத்தின் மேயரை அழைப்பியுங்கள், திரு.ஹோடன் பெல், நீதிபதியை அழைப்பியுங்கள், காவல் துறையை அழைப்பியுங்கள், டாக்டர்.சேம் அடேரை அழைப்பியுங்கள், தென் பகுதியில் சிறந்த டாக்டர் (பெரிய மருத்துவமனை) எப்படிப்பட்டதான தரிசனங்கள் நிகழ்ந்தது என்று அவரிடம் கேளுங்கள், அது உண்மையா என்று அவரிடம் கேளுங்கள். 131. டாக்டர் சேம் அடேரை அழைப்பித்து, ஒரு கடினமான இடத்திற்குள் அவர் கடந்து வந்த போது, அவர் என்ன செய்தார் என்று அவரிடம் கேளுங்கள். அவர் என்னுடைய வீட்டிற்கு வந்து, முழங்கால்படியிட்டு, அங்கே தேவனுக்கு முன்பாக தன்னை அர்ப்பணித்து, அவரும், நானும், தேவன் ஒரு தரிசனத்தை காண்பிக்குமட்டாக தரித்திருந்தோம். அது எப்பொழுதாகிலும் தவறிப்போனதா என்று அவரிடம் கேளுங்கள். டாக்டர். சேம் அடேரை என்னுடைய செலவில் அழைப்பியுங்கள். ஒரு பெரிய மருத்துவமனை நடத்திக் கொண்டிருக்கிறார். அவருக்கு அந்த மருத்துவமனை அந்த இடத்தில் எப்படி கிடைத்தது என்று அவரிடம் கேளுங்கள். அவர் அழுதுக்கொண்டே என்னுடைய வீட்டிற்கு வந்து, பட்டினத்திற்கு ஒரு மருத்துவமனை தேவையாயிருக்கிறது என்று சொன்னார். அப்பொழுது அது எங்கு கட்டப்படும் என்று அவரிடம் சொன்னேன். அவர் அதை கட்டினார். 132. "நீ அந்த இடத்தை வாங்க முடியாது” என்று அவர் சொன்னார். "இந்த நாளிலிருந்து 25 வருடங்களுக்கு முன்பு அது பாஸ்டனுடைய விளையாட்டு அரங்கத்திற்குள்ளாக இருந்தது. 133. "கர்த்தர் உரைக்கிறதாவது, இன்னும் 24 மணி நேரத்திற்குள் அது உங்களுடையதாய் இருக்கும்” என்று சொன்னேன். மேலும் நான் சொன்னேன் “உங்களுக்கு அங்கே ஒரு மருத்துவமனை இருக்கப் போகிறது, அது சிவப்பு நிற செங்கலினால் கட்டப்பட்டிருக்கும். கதவில் ஒரு அடையாளத்தை நீங்கள் கொண்டிருக்கப்போகிறீர்கள்", இன்னும் அப்படிப்பட்ட காரியங்கள், இன்னும் அதைப் போன்றவைகள். "பில்லி நான் உன்னை எந்த விதத்திலும் சந்தேகிக்க முடியாது மகனே" என்று சொன்னார். கர்த்தர் அதை உங்களுக்கு கொடுத்தார் டாக்டர் என்று நான் சொன்னேன். 134. இன்று இரவு அவரை அழைப்பித்து என்ன சம்பவித்தது என்று அவரிடம் கேளுங்கள். அடுத்த நாள் காலையில் அவர் என்னை அழைத்து "நான் மரணத்திற்குள்ளாக உரைந்து போய்க் கொண்டிருக்கிறேன். அவர்கள் சற்றே என்னை அழைத்தார்கள், சென்ற இரவிலே ஏதோ ஒன்று சம்பவித்தது, நாங்கள் ஏற்கனவே அந்த இடத்தை வாங்கிலவிட்டோம்" என்றார்கள். சுகமாகும் என்ற எந்த நம்பிக்கையும் இல்லாத அளவிற்கு கேன்ஸர் வியாதியானது சரீரத்தை தின்று போட்ட நிலையில், அவரிடத்தில் வருகிற நோயாளிகளை அவர் என்னிடத்தில் அனுப்பும்போது, நாங்கள் அதற்காக ஜெபிப்போம். ஆஸ்பத்திரியிலிருந்து அவர் என்னிடம் ஓடி வருவார். நாங்கள் அறைக்குள்ளே சென்று கதவை அடைத்து விடுவோம். அவர்கள் சுகத்தைப் பெற்றுக் கொள்வார்களா அல்லது என்ன சம்பவிக்கும் என்று கர்த்தர் ஒரு தரிசனத்தை காண்பிப்பார். அது எப்பொழுதாகிலும் தவறிப்போனதா என்று அவரிடம் கேட்டுப்பாருங்கள். இது ஒரு சிறிய காரியம் மாத்திரமே. என்னுடைய எந்த ஒரு கூட்டத்திலும் நான் பார்த்ததிலேயே இது மிகவும் எளிமையான காரியம் மாத்திரமே. அது சரியே, அது எவ்விதத்திலும் முறியடிக்கப்பட நான் எல்லாவிதத்திலும் முயற்சித்தேன். 135. நான் கடந்து வந்தேன். நீங்கள் ஜெப அட்டைகளை நினைத்துக் கொண்டீர்கள். இங்கு நான் உங்களுக்கு ஊழியக்காரனாகவும், உங்கள் சகோதரனாகவும் இருக்கிறேன். இங்கே இந்த காரியங்கள்.... என்னுடைய புஸ்தகங்களின் விற்பனையாளர் இங்கு எங்கோ அமர்ந்திருக்கிறார். 136. லியோ, ஜீன், இங்கே இரண்டு பையன்கள், ஒருவர் கத்தோலிக்கர், இன்னொருவர் எதையும் சாராதவர் என்று நினைக்கிறேன். அவர் இந்தியானாவிலிருக்கும் ஹேமண்டுக்கு வந்தபோது, ஆயிரக் கணக்கான ஜனங்கள் மத்தியிலிருந்து, சில வருடங்களுக்கு முன்பாக அவர்களை தேவன் வெளியே அழைத்தபோது, அதில் ஒருவர் பெரிய தாடியை வளர்த்துக் கொண்டார். தங்களுக்கு தாங்களே எஃப்.பி.ஐ யை அவர்கள் ஸ்தாபித்து அவர்களுடைய காரியங்கள் சரியாக இருக்கின்றதா என்று பார்க்கும்படியாக கீழிறங்கி வந்தார்கள். என்னுடைய வீட்டிற்கு வந்து சுவிசேஷகர்களைப் போலவும் இன்னும் மற்றவைகளைப் போலவும் காட்சியளித்தார்கள். மேலும் பரிசுத்த ஆவியானவர் கீழே இறங்கி வந்து அந்த அசுத்த ஆவியை வெளியே அழைத்தார். இப்பொழுது அவர்கள் இங்கே அமர்ந்திருக்கிறார்கள். பாருங்கள், ஏன் உங்களால் அதில் நிற்க முடியவில்லை-? காரியம் என்னவாயிருக்கிறது. 137. திரு.உட்ஸ், அவர் இங்கு எங்கேயோ இருக்கிறார். இவ்விதமாக என்னிடத்தில் சொல்லிக் கொண்டிருந்தார். சுரியாக இங்கே அமர்ந்திருக்கிறார்..... லூஸியனாவுக்கு கீழ் பகுதியில், அவர் காயப்பட்டதை நான் பார்த்தேன். நான் அவரை தொலைப்பேசியில் அவரை அழைத்து, கவனித்திருக்கும்படியாக அவரிடத்தில் சொன்னேன். அடுத்த நாள் அவர் தன்னுடைய கட்டை விரலை துண்டித்துக் கொண்டார். பரிசுத்த ஆவியானவர் சொல்லியிருந்தால் தன்னுடைய கையைக்கூட துண்டித்துக் கொண்டிருப்பார்....... சில இரவுகளுக்கு முன்பாக அவர் சிக்காகோவில் இருந்த போது, அவர் புகையின் மத்தியிலிருந்ததை பார்த்து, கவனமாக இருக்கும்படியாக சொன்னேன். அவருக்கு அங்கே தானே ஈய விஷவாயுவின் பாதிப்பு இருந்தது, மேலும் அந்த புகை மண்டலத்திற்குள்ளாக சிக்கிக் கொண்டு அங்கே தானே மரிப்பதற்கு இருந்தார். 138. அது நடப்பதற்கு முன்பாக, வாரத்திற்கு பிறகு வாரமும், மாதத்திற்கு பிறகு மாதமுமாக காரியங்கள் எவ்விதமாக முன்னுரைக்கப்பட்டதென்று கேட்டுப் பாருங்கள். இந்த வாரத்தின் பின்பாக, இது என்னவென்று நான் உங்களுக்கு காண்பிப்பேன். இது உங்களுடைய சொந்த விசுவாசம். எந்தவிதமான காரியங்களும் நடக்காமலிருப்பதற்கு அது தான் காரணம். பரிசுத்த ஆவிக்குள்ளாக இருந்து இழுத்துக் கொள்வது நீங்கள்....... 139. அந்த ஸ்திரீயைக் குறித்த எந்த தரிசனத்தையும் இயேசு பார்க்கவில்லை. அது அவளுடைய விசுவாசமே அவரைத் தொட்டது. அவர் பெலனை இழந்து போனதற்கு அது தான் காரணம். உங்களுடைய விசுவாசமே அவைகளை செய்கிறது, என்னுடைய விசுவாசமல்ல. அதை செய்வது நீங்கள் தான். உங்களுக்குள்ளாக இருக்கின்ற அந்த ஆவிகளின் உணர்வுகளை எடுத்துப் போட்டு, உண்மையாக தேவனை விசுவாசிப்பீர்களானால், இந்த காரியங்களெல்லாம் உடைக்கப்பட்டு, மகத்தான பெரிய அல்லேலூயா எழுப்புதலுக்குள்ளாக உங்களை கொண்டு சென்று முடவர், குருடர், கால் ஊனம் இன்னும் எல்லா காரியங்களும் நிகழ்வுக்குள்ளாக வரும். ஆனால் நீங்கள் அடைப்புக்குள்ளாக இருக்கும் வரை, அவர் எப்படி அவைகளை செய்ய முடியும். 140. மாற்றங்களை ஏற்று கொள்ளாமலிருப்பதை நான் விசுவாசிக்கிறேன். ஆனால் அது மாத்திரமல்ல. அந்த மாற்றங்களை ஏற்று கொள்ளாதவர் என்ற காரியம் உங்களுக்கு மூட நம்பிக்கையின் ஆவியைக் கொடுக்கிறது. என்னிடத்தில் சொல்லாதீர்கள். நான் இவ்விடத்தில் நின்றுக் கொண்டிருக்கிறேன். நான் என்ன பேசுகிறேன் என்பதை அறிந்திருக்கிறேன். பரிசுத்த ஆவியானவர் சரியாக இப்பொழுது இந்த கட்டிடத்தில் இருக்கிறார், சரியாக இப்பொழுது, நீங்கள் அதை விசுவாசிப்பீர்களானால், நீங்கள் இருக்கிற இடத்திலேயே உங்கள் ஒவ்வொருவரையும் சுகப்படுத்துவார். அவர் ஏற்கனவே அதை செய்து முடித்துவிட்டார். எத்தனைப் பேர் அதை விசுவாசிக்கிறீர்கள்-? நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? சரி, நீங்கள் எவ்வளவாக அதை விசுவாசிக்கிறீர்கள் என்பதை நான் பார்க்கட்டும். 141. சிறிது நேரம் உங்களுடைய தலைகளை வணங்கியிருங்கள். உங்களுடைய கரத்தை உங்களுக்கு அருகாமையிலிருக்கும் ஒருவர் மீது வையுங்கள். இப்பொழுது எல்லாவிதமான மூட நம்பிக்கையில் இருந்தும் விலகியிருங்கள். நீங்கள் கிறிஸ்துவினுடைய ஆளுகையின் கீழாக இருக்கிறீர்கள். "எங்கே இரண்டு மூன்று பேர் என்னுடைய நாமத்தினாலே கூடி வருகிறார்களோ, அவர்கள் மத்தியில் நான் இருப்பேன்". 142. நீங்கள் என்னை ஒரு வேளை மாய்மாலக்காரன் என்று அழைக்கக்கூடும். ஆனால் இன்னும் ஒரு நிமிடத்தில் நீங்கள் கண்டுக்கொள்வீர்கள். இப்பொழுதே ஜனங்கள் சுகமடைகிறதை நான் பார்க்கிறேன். அது சரியே, சரியாக இப்பொழுதே . நீங்கள் ஒருவேளை அதை அடையாளம் கண்டுக்கொண்டிருக்கலாம். ஆனால் இந்த கட்டிடத்திலிருந்து, நான் சென்ற பிறகு, மேய்ப்பர்கள், ஜனங்கள் தங்களிடத்தில் வராமலிருப்பதைக் பார்க்கும் போது, வயிற்று தொந்தரவுகள் இன்னும் அதை போன்றவைகள் தங்களைவிட்டுப் போய்விட்டது என்று சொல்வார்களானால், நான் ஒரு தவறான சாட்சியாயிருப்பேன். அது சரியே, அது சரியே, நான் அதை பார்க்கிறேன். நான் வேறொரு உலகத்தில் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் விசுவாசியுங்கள். 143. நீங்கள் விசுவாசியுங்கள், நிச்சயமாகவே, வலது கைக்கும், இடது கைக்கும் வித்தியாசம் தெரியாமலிருக்கும் ஒரு ஏழை அறியாமையில் இருக்கும் ஆப்பரிக்க பழங்குடியினர் அதை ஏற்றுக்கொள்ளக் கூடுமானால், கிறிஸ்தவ மார்க்கத்தில் போதிக்கப்பட்டு, வேதத்தை வாசிக்கக்கூடிய உங்களைக் குறித்தென்ன-? ஒரு ஏழை மனிதன் ஒருமுறை பார்த்துவிட்டு விசுவாசிக்கக் கூடுமானால் (ஏனென்றால் அடுத்த நாள் நான் வேறொரு இடத்திற்கு போக வேண்டும்) சக்கர நாற்காலியிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் எழுந்திருப்பதையும், முடமானவர்கள், குருடர் இன்னும்... உங்களைக் குறித்தென்ன-? ஓ, தேவனே நீர் எவ்வளவு இரக்கமுள்ளவர், ஒருவரும் அழிந்துபோகக் கூடாதென்ற வாஞ்சையினால் நீடியப்பொறுமையாய் இருக்கிறீர். 145. இப்பொழுது தேவனுடன் நெருக்கமாயிருங்கள். உங்களுடைய பாவங்களை அறிக்கை செய்யுங்கள். உங்களுடைய அவிசுவாசத்தை அறிக்கை செய்யுங்கள். அவிசுவாசத்தை குறித்து உங்களுக்கு நீங்களே வெட்கப்படுவதாக தேவனிடம் சொல்லுங்கள். அதை செய்யும்படியாக நான் உங்களுக்கு சவால் விடுகிறேன். அப்பொழுது நீங்கள் தேவனுடைய மகிமையை காண்பீர்கள். நான் இது வரை செய்திருப்பதிலிருந்து ஏதோ ஒன்று வித்தியாசமான முறையில், இதுவரை நான் செய்திராத வண்ணமாக செய்யும்படியான அபிஷேகத்தை இப்பொழுதே நான் உணருகிறேன். 146. உங்களுடைய பாவங்களை அறிக்கை செய்யுங்கள். “நல்லது, நான் ஒரு கிறிஸ்தவன் என்று சொல்லுகிறீர்கள்". உங்களுடைய அவிசுவாசத்தை அறிக்கையிடுங்கள். நான் மறுபடியுமாய் அவிசுவாசிக்க மாட்டேன் என்று கிறிஸ்துவிடம் சொல்லுங்கள். சரியாக இப்பொழுதே நீங்கள் அவரை ஏற்றுகொள்கிறீர்கள். சரியாக இப்பொழுதே அது முடிந்து போகிறது. நீங்கள் மறுபடியுமாக அதைக் குறித்து புகார் செய்யப்போகிறதில்லை. அது எவ்விதமாக தோற்றம் அளிக்கிறது, அது எவ்விதமாக உணரப்படுகிறது என்பதைக்குறித்து கவலையில்லை. நீங்கள் எப்படியாகிலும் அதை விசுவாசிக்கப் போகிறீர்கள். ஏனென்றால் தேவன் அவ்விதமாக சொல்லியிருக்கிறார். தேவன் அவ்விதமாக சொல்லியிருக்கிறார். 147. நீங்கள் பாபிலோனின் கோபுரத்திலிருந்து வெளியே வந்து விட்டீர்கள். நீங்கள் பள்ளத்தாக்கின் லீலி இருக்கிற பள்ளத்தாக்குக்கு வரும்படியாக வெளியே வந்திருக்கிறீர்கள். எங்கே தேவனுடைய கிருபையானது ஜீவநீரூற்றாக தடையில்லாமல் பொழிந்தருளப் படுகிறதோ, அந்த மலைப் பகுதிக்குள்ளாக வரும்படியாக வெளியே வந்திருக்கிறீர்கள். 148. உங்களுடைய தவறுகளை அறிக்கையிடுங்கள். நீங்கள் யாருக்காவது எதையாகிலும் தவறாய் செய்திருப்பீர்களானால், “நான் மறுபடியுமாக அவரிடத்தில் சென்று அதை சரி செய்து விடுகிறேன் தேவனே என்று சொல்லுங்கள்" இப்பொழுதே அதை செய்யுங்கள். இப்பொழுது நான் ஜெபத்தை சொல்லுகிறதான வேளையில், நீங்கள் அதை ஜெபிக்க நான் விரும்புகிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் இதை செய்ய வேண்டுமென்று நான் விரும்புகிறேன். என்னோடு சேர்ந்து சத்தமாக அதை சொல்லுங்கள். நான் அதை சொல்ல இருக்கிறேன். ஆனால் நீங்கள் உங்கள் இருதயத்திலிருந்து ஜெபியுங்கள். உங்களுடைய தலைகளை வணங்கிய வண்ணமாக, உங்களுடைய கண்கள் மூடப்பட்டதாக, ஒவ்வொருவரும், நான் அவ்விதமாக சொல்லுகிற வரைக்கும் உங்களுடைய தலைகளை உயர்த்தாது இருங்கள். நான் என்ன பார்க்க முடியும் என்பதைக்காண, நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். 149. எனக்கு பின்பாக இதை சொல்லுங்கள். சர்வ வல்லமையுள்ள தேவனே, வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவரே, சதா காலங்களிலுமிருக்கிற ஜீவனின் ஆக்கியோனே, எல்லாவிதமான நல்ல வெகுமதிகளையும் கொடுப்பவரே, ஓ, தேவனே என் மீது இரக்கமாய் இரும். என்னுடைய அவிசுவாசத்தை மன்னியும். சுவிசேஷத்தை நான் விசுவாசிக்கிறேன். நீர் இங்கு இருக்கிறீர் என்று நான் விசுவாசிக்கிறேன். இப்பொழுது என்னுடைய சரீரத்திலே உம்முடைய வார்த்தையை செயல்படுத்துகிறீர் என்று விசுவாசிக்கிறேன். வாய்கால்களை திறந்து என்னுடைய அவிசுவாசத்தை வெற்றிடம் ஆக்குகிறேன். உம்முடைய ஆவியை நான் பெற்றுக்கொள்ளுகிறேன். இப்பொழுது நீர் எனக்குள்ளாக இருக்கிறீர் என்று நான் விசுவாசிக்கிறேன். என்னுடைய நோய்களெல்லாம் மறைந்து போய் விடும் என்று நான் விசுவாசிக்கிறேன். நீர் எனக்குள்ளாக அங்கே இருக்கும்போது, ஜீவனும், மரணமும் எனக்குள்ளாக எப்படி வாழ்ந்திருக்க முடியும், நான் உம்மை விசுவாசித்து, எனக்கு சுகமளிக்கிறவர் என்று இப்பொழுது நான் விசுவாசிக்கிறேன். 150. இப்பொழுது உங்கள் தலைகள் வணங்கியிருக்கட்டும். அது உங்களுடைய ஜெபம், அது உங்களுடைய ஜெபம். இப்பொழுது நான் உங்களுக்காக ஜெபிக்கப்போகிறேன். உங்களை உள்ளாக அடைத்துக் கொள்ளுங்கள். உங்களை தேவனோடு உள்ளாக அடைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது உங்களுடைய சிந்தையில் எதுவும் இருக்க வேண்டாம். சரியாக அவர் உங்களோடிருக்கிறார். சரியாக உங்களுக்கு பக்கத்திலிருக்கிறார். சகோதரன் பிரன்ஹாமே "எனக்கு பரிசுத்த ஆவி வேண்டும்” என்று சொல்லுகிறீர்கள். சரி, அதை கொடுப்பதற்கு அவர் அங்கே இருக்கிறார். சகோதரன் பிரன்ஹாம் "என்னுடைய கண்களுக்கு சுகம் வேண்டும்" என்று சொல்லுகிறீர்கள். அதை கொடுப்பதற்கு சரியாக அவர் அங்கே இருக்கிறார். "என்னுடைய குழந்தை சுகமடைய வேண்டும்” சகோதரன் பிரன்ஹாம் என்று சொல்லுகிறீர்கள். அதை செய்வதற்கு சரியாக அவர் அங்கே இருக்கிறார். "எனக்கு என்னுடைய சகோதரன் அல்லது என்னுடைய தாயார்....... அதை செய்வதற்கு சரியாக அவர் அங்கே இருக்கிறார். சரியாக அங்கே இருக்கிறார். யேகோவாயீரே, நிபந்தனைக்கு உட்பட்ட பலி. 151. இப்பொழுது நான் உங்களுக்காக ஜெபிக்க போகிறேன். "விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும் என்று வேதம் சொல்லுகிறது. தேவன் அவர்களை எழுப்பி நிறுத்தினார்”. பரிசுத்த ஆவியின் கிரியையின் மூலமாக உங்களுடைய கண்களில் எனக்கு கிருபை கிடைக்குமானால், சரியாக இப்பொழுதே என்னுடைய முழு இருதயத்தோடும் நான் ஜெபிக்கப்போகிறேன். அதன் மூலம் அவருடைய கிரியைகள் நடந்து முடிக்கப்பட்ட ஒன்று என்பதை பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் சாட்சியிடுவார். 152. ஓ தேவனே, என்னுடைய தகப்பனே, உத்தமமாகவும், உண்மையாகவும் தங்களுடைய தவறானவைகளை அறிக்கை செய்த இந்த ஜனங்களுக்காக இயேசுவின் நாமத்தில் நான் இங்கு வந்திருக்கிறேன். ஓ, ஆசீர்வதிக்கப்பட்ட தேவனே, அவர்கள் எப்பொழுதும் மறக்க முடியாத ஒரு இரவாக இது இருக்கட்டும். பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு இருதயத்திற்குள்ளும் இப்பொழுதே வரட்டும், வந்து எல்லாவற்றையும் அகற்றிப் போட்டு, அவர்களுடைய சரீரத்திலிருக்கும் வியாதி இன்னும் மற்ற எல்லாவற்றையும் அகற்றிப் போடட்டும். 153. இப்பொழுது நான் பிசாசுக்கு ஒரு வாதத்திற்காக சவால் விடுகிறேன். சாத்தானே நீ அடிபட்டதினாலே ஜாக்கிரதையாய் இருக்கிறாய். சட்ட ரீதியாக எனக்கு எந்த உரிமையும் கிடையாது. இயேசு கிறிஸ்துவாகிய என்னுடைய கர்த்தர், பாவங்களுக்காகவும், வியாதிகளுக்காகவும் கல்வாரியில் அவர் மரித்த போது, உன்னிடத்திலிருந்த எல்லா அதிகாரங்களையும் உரிந்து போட்டார். நீ ஒரு ஏமாற்றுகாரன் என்பதை தவிர நீ வேறொன்றுமில்லை. நீ ஒரு ஏமாற்றுகாரன் என்று நாங்கள் உன்னை கூப்பிடுகிறோம். நீங்கள் அறிவீர்கள், கர்த்தர் அந்த மரத்தினிடத்தில் வந்த போது, அந்த மரத்தை சபித்தார். அடுத்த நாள் அது பட்டுப்போயிற்று. நம்முடைய கர்த்தர் தம்முடைய சீஷர்களை பார்த்து சொன்னார், "தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். ஏனென்றால் நீங்கள் இந்த மலைளை பார்த்து "தள்ளுண்டு போ” என்று இருதயத்தில் சந்தேகப்படாமல் சொல்வீர்களானால், ஆனால் நீங்கள் சொன்னது நிறைவேறும் என்று விசுவாசிப்பீர்களானால், நீங்கள் என்ன சொன்னீர்களோ அதை பெற்றுக் கொள்வீர்கள்”. 154. அதை குறித்ததான வேதவாக்கியம் உனக்கு தெரியும். தேவன் அவர்களுக்குள் இருக்கிறார் என்று இந்த ஜனங்களுக்கு நான் போதித்திருக்கிறேன். தேவன் அவர்களுக்குள்ளாக இருந்து அந்த வியாதியை பார்த்து, "என்னை விட்டு அகன்று போ” என்று இருதயத்தில் எந்தவித சந்தேகமுமில்லாமல் சொல்வார்களானால், சரியாக அப்பொழுதே வியாதி அவர்களைவிட்டு போகவேண்டும், ஏனென்றால் கிறிஸ்து அவ்விதமாக சொல்லியிருக்கிறார். ஏனென்றால், அவர்கள் அதை பேசவில்லை, அவர்களுக்குள்ளாக வாசம் பண்ணும் பிதாவே அவர்களுக்குள்ளாக இருந்து பேசிக் கொண்டிருக்கிறார். அவர்கள் அவ்விதமான தேவைகளோடு இருக்கிறார்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவர்களை விட்டு வெளியே வா. ஒரு தூதன் மூலமாக எனக்குக் கொடுக்கப்பட்ட செய்தியின் மூலமாக, அவருடைய ஊழியக்காரன் என்று முறையில், ஜனங்களை அபிஷேகித்து இயேசு இங்கிருக்கிறார் என்று நிரூபித்தார். செய்தியானது உண்மையாயிருக்கிறது. ஆதலால் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவர்களைவிட்டு வெளியே வா. வியாதிபட்டிருக்கிற ஒவ்வொரு நபரையும் விட்டுப் போகும்படி யாகவும் புறம்பான இருளுக்குள்ளாக போகும்படியாகவும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உன்னை சத்தியத்திற்கு கட்டுப்படுத்தி குற்றஞ்சாட்டுகிறேன். 155. (சகோ.பிரன்ஹாம் ஐந்து வினாடிகள் தற்காலிகமாக நிறுத்துகிறார், தேவன் அவரிடத்தில் பேசுவதை கவனித்திருக்கிறார்.) நீங்கள் அதை கேட்டீர்களா-? நீங்கள் அதை கேட்டீர்களென்று நான் நிச்சயமாக அறிவேன். எத்தனைப் பேர் கூட்டத்திற்குள்ளாக அந்த மகத்தான முழக்கம் சென்றதை கவனித்தீர்கள்-? அது அது தான், நிச்சயமாக. இனிமேலும் நீங்கள் சந்தேகிக்கமாட்டீர்கள். அது தேவன் மீண்டுமாக பேசுவது. உங்களால் பார்க்க முடிகிறதா-? (சகோ. பிரன்ஹாம் 6 வினாடிகள் தற்காலிகமாக நிறுத்துகிறார்.) 156. எழுந்து நில்லுங்கள். நீங்கள் சுகமடைந்து விட்டீர்களென்று விசுவாசிக்கிறர்களா-? தேவன் ஜெபத்திற்கு பதிலளித்தார் என்று விசுவாசிக்கிறர்களா-? அவரிடத்திற்கு உங்கள் கரங்களை உயர்த்துங்கள். அதற்காக அவருக்கு நன்றி செலுத்துங்கள். அது முடிந்து விட்டது, நீங்கள் சுகமடைந்து விட்டீர்கள். இயேசு சொன்னார், நீங்கள் சொல்வீர்களானால்...... அது என்னவாயிருக்கிறது-? நீங்கள் பாபிலோனை விட்டு வெளியே இருக்கும் போது, அவிசுவாசத்தை விட்டு வெளியே இருக்கும் போது, நீங்கள் மூட நம்பிக்கையை விட்டு வெளியே இருக்கும் போது, நீங்கள் இவ்விதமான எல்லா காரியங்களையும் விட்டு வெளியே இருக்கும் போது, நீங்கள் தேவனுடைய சொந்த ஜீவனால் நிரப்பப்பட்டிருக்கிறீர்கள். உங்களுடைய சத்தம் அவருடைய சத்தமாயிருக்கிறது. அது நீங்கள் தான். நான் அதை சொன்னேன். 157. சிறிது நேரத்திற்கு முன்னால், இதை செய் என்று தேவன் சொன்னார். அது அவ்விதமாகவே சம்பவித்தது. இப்பொழுது சரியாக அவர் அதை உறுதிபடுத்துகிறார். ஆமென். கர்த்தருடைய நாமம் ஆசீர்வதிக்கப்படுவதாக. ஓ, எப்படிப்பட்டதான ஒரு நேரம். தென் ஆப்பரிக்க கூட்டங்களுக்கு பிறகு இது தான் முதல் தடவை. இன்னும் எவ்வளவு காலம் அவிசுவாசத்திற்குள்ளாக துழாவி வழி கண்டுபிடித்துக் கொண்டிருப்பீர்கள்-? பரிசுத்த ஆவியானவர் கடந்து சென்ற போது, இங்கே இப்பொழுது காற்றானது மேடையை துடைத்துக் கொண்டு போனது. ஏனென்றால் உரைக்கப்பட்ட வார்த்தையே அதை செய்தது. ஆமென். 158. எத்தனைப் பேர் சுகமடைந்திருக்கிறீர்கள்-? உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். எத்தனைப் பேர் உங்களுடைய சரீரங்களிலே வித்தியாசத்தை உணருகிறீர்கள். உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். அது அங்கே இருக்கிறது. தேவனுடைய மகிமையினாலே நீங்கள் சுகமாக்கப்பட்டு இருக்கிறீர்கள். வித்தியாசத்தை உணருகிற யாவரும், உங்களுடைய கரங்களை அசைக்க முடியாவிட்டால், அதை அசையுங்கள். உங்கள் காதுகளால் கேட்க முடியாவிட்டால், உங்களுடைய காதுக்குள் விரலை வைத்து கவனியுங்கள்-! உங்களால் கேட்க முடியும். உங்களால் நடக்க முடியாவிட்டால், உங்களுடைய கால்களில் நில்லுங்கள். நீங்கள் குருடர்களாய் இருப்பீர்களானால், உங்களுடைய கண்களிலிருக்கிற நிழல்களை எடுத்துப் போடுங்கள், உங்களால் பார்க்க முடியும். வார்த்தையின் நிரூபணத்தினால் இப்பொழுது பரிசுத்த ஆவியானவர் இந்த இடத்தை கடந்துபோனார். அல்லேலூயா-! கர்த்தருடைய நாமம் ஆசீர்வதிக்கப்படுவதாக. 159. காற்றைப் போன்றது கட்டிடத்தினூடாக கடந்து சென்றது. அது இங்கே கடந்து சென்ற போது, எத்தனைப் பேரால் அதை உணர முடிந்தது, உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். உங்களுக்குள்ளாக உத்தமமாயிருங்கள். இந்த கட்டிடத்தினூடாக கடந்து சென்றது. அது பரிசுத்த ஆவியாயிருக்கிறது. சொல்லுங்கள், அது அவ்விதமாகவே நடக்கும். அது ஒரு மகத்தான அன்பு நிறைந்த காற்றாக கடந்து சென்றது. உஷ்ஷ், இந்த வழியாக அது கடந்து வந்து, அது கூட்டத்திற்குள்ளாக கடந்து சென்றதை நான் கேட்டேன். நீங்களும் அதை கேட்டு உணர்ந்தீர்கள். அது அவருடைய பிரசன்னம். வித்தியாசமாக உணருகிற யாவரும், சுகமாக்கப்பட்டோம் என்று உணர்ந்தவர்கள், கிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறதை உணருகிற யாவரும்...... 160. அது என்னவாயிருந்தது-? பெந்தெகோஸ்தே நாளில் வந்த பரிசுத்த ஆவியைப் போல அது இருக்கிறது. காற்றானது இந்த வழியாக துடைத்து தூய்மையாக்கி சென்றது. எத்தனைப் பேர் அதற்கு சாட்சியாய் இருக்கிறீர்கள். உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். ஒவ்வொருவரும் உத்தமமான இருதயத்தோடு.... அங்கே அது இருக்கிறது. பின்பு அது இந்த கட்டிடத்தினூடாக துடைத்து சென்றது. அது அதே பரிசுத்த ஆவியானவர். அவர் அதே வார்த்தையோடு வரும் பரிசுத்த ஆவியானவர். கர்த்தருடைய நாமம் ஆசீர்வதிக்கப்படுவதாக. ஆமென். 161. சுகத்தை பெற்றுக் கொண்டதை விசுவாசிக்கிற யாவரும், உங்களுடைய கால்களில் நில்லுங்கள். வித்தியாசத்தை உணருகிறதை விசுவாசிக்கிற ஒவ்வொருவரும், இப்பொழுது சுகத்தைப் பெற்றுக் கொண்ட ஒவ்வொருவரும், உங்கள் கால்களில் நில்லுங்கள். ஆமென், ஆமென், அது தான் அது, ஆமென். அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறதான வேளையில், நீங்கள் வித்தியாசத்தை உணர ஆரம்பிக்கிற வேளையில்..... உங்களுக்கு தலைவலி இருந்து, அது சுகமாகி இருந்தால் எழுந்து நில்லுங்கள். உங்கள் வயிற்று பகுதியில் சுகவீனமாயிருந்தவர்கள், எழுந்து நில்லுங்கள் அது போய் விட்டது. சாட்சியாக எழுந்து நில்லுங்கள். அங்கே தான் நீங்கள் இருக்கிறீர்கள். அது அங்கே என்ன செய்தது-? அதை செய்தது பரிசுத்த ஆவியானவர். ஆமென். அவருடைய நன்மையினால் நிரப்புகிறார்..... ஓ, இது தான் என்னுடைய கதை, இது தான் என்னுடைய பாடல், நீங்கள் நல்லதாக உணருகிறீர்களா-? இயேசுவை பாடி போற்றிடுவேன் நேசரைப் பார்த்து பூரிக்கிறேன் மீட்பரை நம்பி நேசிக்கிறேன் நீடூழி காலம் ஸ்தோத்தரிப்பேன் மறுபடியுமாக நாம் அதை பாடுவோம், ஒவ்வொருவரும் அதை எடுத்துக் கொள்வோம். இயேசுவை பாடி போற்றிடுவேன் நேசரைப் பார்த்து பூரிக்கிறேன் மீட்பரை நம்பி நேசிக்கிறேன் நீடூழி காலம் ஸ்தோத்தரிப்பேன்.... 162. சுகமாக்கப்பட்டதை குறித்து எப்படி உணருகிறீர்கள்-? உங்களுடைய கரங்களை அசையுங்கள். சுகத்தைப் பெற்று கொண்டதை குறித்து எப்படி உணருகிறீர்கள். அங்கு சற்று பாருங்கள். சாத்தான் தோற்று போனானா இல்லையா என்று எனக்கு சொல்லுங்கள். நிச்சயமாக, அவன் தோற்று போனான். ஆமென். அவர் அற்புதமானவர். ஓ, என்னே,“அற்புதம், அற்புதம் இயேசு எனக்கு" என்பதற்கு ராகம் கொடுங்கள். எத்தனை பேருக்கு அந்த பாடல் தெரியும். அற்புதம், அற்புதம் இயேசு எனக்கு, ஆலோசளை கர்த்தராம், வல்ல மீட்பராம்-? அது சரி, சகோதரியே, உங்களுக்கு அது தெரியும். இல்லையா-? அற்புதம், அற்புதம் இயேசு எனக்கு ஆலோசளை கர்த்தராம், வல்ல மீட்பராம் பாவம், சாபம் யாவும் நீக்கி என்னை இரட்சித்தார்.